For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே 28 வரை அதிகாரிகளை சந்திக்க கூடாது: முதல்வர், அமைச்சர்களுக்கு பிரவீன்குமார் தடை

By Mayura Akilan
|

சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மே 28ஆம் தேதி வரை அதிகாரிகளை சந்தித்து பேசக்கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவுறுத்தியுள்ளார். வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை ஜூன் 15க்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Candidates rush to file expense accounts to EC on June 15

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:

''தேர்தல் விதிமீறில்கள் குறித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 2,518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

போட்டியிட முடியாது

இந்த தேர்தல் விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றச்சாட்டப்பட்டவர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

செலவு கணக்கு

ஏப்ரல் 24ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை ஜூன் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த செலவு கணக்குகளை சரிபார்க்க ஜூன் 8ஆம் தேர்தல் பார்வையாளர்கள் தமிழகம் வருவார்கள்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கையின்போது 42 மையங்களும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

முதல்வருக்கு தடை

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசு அலுவலகங்களுக்கு வழக்கம் போல் செல்லலாம். ஆனால், அவர்கள் மே 28ஆம் தேதி வரை அதிகாரிகளை சந்தித்து பேசக்கூடாது. புதிய அறிவிப்புகளையும் அரசு வெளியிடக் கூடாது'' என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
As the last day for filing of their expense accounts dawned on June 15, candidates in the Loksabha election rushed to submit their papers to the Election Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X