ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்! புதிய சிக்கலில் கமல்ஹாசன்…!

நடிகர் கமல்ஹாசன் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பாதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெ-பெயருக்கு களங்கம் விளைவிக்கிறாரா கமல்?- வீடியோ

    சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக நடிகர் கமல்ஹாசன் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் இப்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்துவழங்கி வருகிறார். அவரின் விஸ்வரூபம் 2 திரைப்படம் ரிலிஸாக உள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மாநகர காவல் ஆணையாளரிடம், கமல்ஹசன் மீது புகாரளித்துள்ளார்.

    Case against Kamalhasan!

    வழக்கறிஞர் திருமதி.லூயிசாள் ரமேஷ் அளித்துள்ள புகார் மனுவில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி அவருடைய மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்க அவர் எடுத்துள்ள யுக்தி எனவும், அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதமாக கமல் பேசி வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் சர்வாதிகாரியாக ஐஸ்வர்யா நடிப்பதுபோன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், கமல்ஹாசனின் ஏற்பாட்டின்பேரில் சர்வாதிகாரிபோல் நடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் சர்வாதிகாரியாக உள்ள பெண் பொதுமக்களை கொடுமை படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார்.

    இந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும் என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே இந்தத் தொடரை நடத்தும் Endemolshine India என்ற நிறுவனமும் நடிகர் கமல்ஹாசனும் கூறுகின்றனர். அதைத்தான் இவர்கள் நடித்துகாட்டுகின்றனர். அதன்படி 31-07-2018 ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் போட்டியாளரான ரித்விகா என்பவர், இந்த டாஸ்க் வடநாட்டிலிருந்து வந்த ஐஸ்வர்யாவுக்கு தெரியாது. தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என இவர்களுக்கு தெரியாது எனக் கூறுகிறார். இந்த டாஸ்க் முடிந்தவுடன் வரும் சனிக்கிழமை கமல் தொகுத்து வழங்கும்போது தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல பேசுவார்.

    எனவே, தமிழகத்தை அமைதிப்பூங்காவாக ஆட்சி நடத்திய மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியைத் தடை செய்வதோடு, அம்மா அவர்களை சர்வாதிகாரி போல் சித்தரிக்கும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கும் Endemolshine India நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+