For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல் எதிரொலி: சிபிஎஸ்இ ப்ளஸ் டூ தேர்வுத் தேதிகள் மாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி அட்டவணையை முன்னிட்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வுக்கான தேதி அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அட்டவணை:

ஏப்ரல் 9 தேர்வு 25ல் மாற்றம்

ஏப்ரல் 9 தேர்வு 25ல் மாற்றம்

இதன்படி, உருதுமொழி, கர்நாடக இசை - வாய்ப்பாட்டு, கர்நாடக இசை- வாத்தியம், ஹிந்துஸ்தானி இசை - வாய்ப்பாட்டு, ஹிந்துஸ்தானி இசை - வாத்தியம் மற்றும் உருது முக்கியப்பாடம் ஆகியவற்றுக்கான தேர்வுகள் ஏப்ரல் 9-ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும்.

ஏப்ரல் 10 தேர்வு 21ல் மாற்றம்

ஏப்ரல் 10 தேர்வு 21ல் மாற்றம்

மேலும், சமூகவியல், கிராஃபிக் டிசைன்ஸ், டிடிபி கேட் மற்றும் மல்டி மீடியா- பிஸினஸ் பிராஸஸ் அவுட்சோர்ஸிங் ஸ்கில்ஸ் பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெறும்.

ஏப்.12ம் தேதி தேர்வு 19ல் மாற்றம்

ஏப்.12ம் தேதி தேர்வு 19ல் மாற்றம்

மேலும், ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தத்துவம், தொழில்முனைவு, அலுவலக விதிகள் மற்றும் நடைமுறைகள், நிதி மேலாண்மை மற்றும் வீட்டுப் பாதுகாப்பு, தொடர்பியல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு-2, நூலக நிர்வாகம் மற்றும் மேலாண்மை, கணினி மற்றும் ஆயுள் காப்பீடு நிர்வாகம், சுகாதாரம் மற்றும் நோய்கள், மருத்துவக் கலைச்சொற்களின் அடிப்படை நோக்கம், பேறுகால மருத்துவப் பணி, உணவு சேவைகள்-2, புவியியல்சார் தொழில்நுட்பம், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளன.

ஏப்ரல் 12 தேர்வு 22ல் மாற்றம்

ஏப்ரல் 12 தேர்வு 22ல் மாற்றம்

வேளாண்மை, படைப்புத் திறன் எழுத்தாற்றல் மற்றும் மொழிபெயர்ப்புக் கல்வி, ஓவியம், வரைகலை, சிற்பக்கலை மற்றும் பயன்பாட்டு கலை - வர்த்தகவியல் கலை ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Central Board of Secondary Education (CBSE) has effected changes in the dates of Class 12th examination in view of 9-phased Lok Sabha elections. The changes in dates, however, have not gone well with the students and their parents with their plans of vacation going haywire. They too will have to change their plans accordingly.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X