For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களுக்கு இன்னொரு அடி.. ஆதிச்சநல்லூர் மறு அகழாய்வுத் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு!

நெல்லை அருகே ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய திட்டம் இல்லை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    Brief collection! Keeladi Tamils Timeline-Oneindia Tamil

    மதுரை: நெல்லை அருகே ஆதிச்சநல்லூரில் மறு அகழாய்வு செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.

    Centre says no to Adhicahnallur excavation

    இந்த வழக்கில் ஏற்கனவே பதில் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாய்வு பணிகளை தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறி இருந்தது. மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் கூறி இருந்தனர்.

    மத்திய அரசின் பதிலை ஏற்ற நீதிபதிகள் அகழ்வாய்வு பணிகளைத் தொடர் அரசுக்கு விருப்பம் இல்லை எனவே தமிழக அரசு ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர். கடந்த 2004ன் போது ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடக்கவில்லையே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழாய்வு பொருட்களின் வயதை கணக்கில் எடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு அனுப்ப நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கீழடியில் மறுஅகழாய்வு செய்ய மத்திய அரசு விரும்பாததால் திட்டம் கைவிடப்பட்டது போல ஆதிச்சநல்லூரிலும் நடந்துவிடக் கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    English summary
    Highcourt Madurai bench ordered tamilnadu government to allot fund immediatley for Adhichanallur excavation, to made museum for the things recovered there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X