For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வானிலை மைய 'வாக்கு' பலித்தது- தென் மாவட்டங்களில் கொட்டிய கனமழை – சென்னையில் வெயில்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இதமான வெயிலடித்து வரும் நிலையில் வானிலை ஆய்வுமைய வாக்குப்படி தென் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டிய கனமழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அனல்காற்று வீசியது. சென்னையில் புதன்கிழமை வெப்பநிலை 100 டிகிரியாக பதிவானது.

இந்தநிலையில் லட்சத்தீவு கடல்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.

திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ரமணன் கூறியிருந்தார்.

பலித்த வாக்கு

பலித்த வாக்கு

வானிலை ஆய்வு மைய வாக்குப்படி இன்று காலை முதலே மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து மழை வெளுத்து வாங்கியது. சூறாவளி காற்றுடன் இடியும் மின்னலுமாய் கனமழை கொட்டியதால் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. மழை பெய்து வருவதால் திண்டுக்கல்வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரையில் மழை

மதுரையில் மழை

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. சிம்மக்கல், கோரிபாளையம், கே.புதூர், மாட்டுத்தாவணி, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. மேலும் வில்லாபுரம், கீரத்துறை, அவனியாபுரம், விளாங்குடி, கூடல்நகரிலும் கனமழை பெய்தது.

சென்னையில் 100 டிகிரி

சென்னையில் 100 டிகிரி

வெப்ப நிலையைப் பொருத்தமட்டில் அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 97, 82 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும். தமிழகத்திலேயே சென்னையில் புதன்கிழமை அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக கரூர் பரமத்தியில் 99-ம், பாளையங்கோட்டையில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மற்ற மாவட்டங்களில் 99 டிகிரிக்கும் குறைவாகவே வெயில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவில் மழைக்கு வாய்ப்பு

இரவில் மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் காற்று அதிகமாக வீசும். இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் ரமணன் கூறியுள்ளார்.

English summary
Low-level LWD over Peninsula is now running from South Tamilnadu to central Karnataka and to South west Maharastra. Chance for Rain in next 24 Hours in South Tamilnadu says Meteorological Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X