For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்க ஊரு மெட்ராஸூ... சென்னையின் சிறப்பு கூறும் பாடல்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பல அடுக்கு மாடிகளைக் கொண்ட அபார்ட்மென்ட்கள் ஒருபுறம் இருக்க கூவம் ஆற்றங்கரையோரம் குடிசைகள் சூழ்ந்திருக்க சென்னை நகரம் அமைதியாய் தனது 376வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.

சென்னை என மெட்ராஸ் பெயர் மாறினாலும் கிராமப்புறங்களிலும் சட்டென கூறுவது மெட்ராஸ்தான். சென்னையின் அழகை சினிமாவின் மூலமாக பார்த்து ரசித்தவர்கள் அதிகம்.

அன்றைய மெட்ராஸ் தொடங்கி இன்றைய சென்னை வரை நகரின் சிறப்பு விளக்கும் பல திரைப்படப்பாடல்கள் உள்ளன. கேட்டு ரசிங்களேன்.

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸ் நகரின் பிரம்மாண்டத்தை பார்த்து பாடும் கிராமத்துவாசி நாகேஸ். 1967ம் ஆண்டு வெளியான அனுபவி ராஜா அனுபவி படப்பாடல்.

மெட்ராஸை சுத்திப்பார்ப்போம்

வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண்ணின் ஆசையை வெளிப்படுத்தும் இந்தப்பாடல் 1994ம் ஆம் ஆண்டு மே மாதம் படத்தில் இடம் பெற்றுள்ளது.

அழகான சென்னை

மதராசப்பட்டிணம் படத்தில் அந்த கால சென்னையை படம் பிடித்து காட்டியுள்ளனர். இந்தகால ரசிகர்கள் அதிகம் ரசித்த பாடல் இது.

வணக்கம் சென்னை

வாழவைத்த சென்னைக்கு வணக்கம் சொல்லும் மெரீனா படப்பாடல்.

வந்தாரை வாழவைக்கும்

தென் மாவட்ட மக்களின் கனவு சென்னைக்கு வரவேண்டும் என்பதுதான். வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இந்தப் பாடல் இடம் பெற்ற படம் மதில் மேல் பூனை.

அனிருத் பாடல்

கடந்த ஆண்டு சென்னை 375 வது பிறந்தநாளை கொண்டாடிய போது இசையமைப்பாளர் அனிருத் பாடிய அட்டகாசமான சென்னைப் பாடல்.

எங்க ஊரு மெட்ராஸூ

மெட்ராஸ் படத்தில் இடம் பெற்ற வட சென்னையின் அழகை எடுத்துக்கூறும் எங்க ஊரு மெட்ராஸூ பாடல்.

English summary
Here is the lists songs about Chennai. Chennai celebrates 376 birthday today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X