For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை முதல் அம்மா உணவகங்களில் ரூ.3க்கு 2 சப்பாத்தி: பார்சல் கிடையாது

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் நாளை முதல் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சி நகரில் உள்ள 200 வார்டுகளிலும் தலா ஒரு அம்மா உணவகம் என மொத்தம் 200 உணவகங்களை நடத்தி வருகிறது. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை ரூ.1க்கு ஒரு இட்லி, ரூ.5க்கு பொங்கல் வழங்கப்படுகிறது.

மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.5க்கு கறிவேப்பிலை சாதம், ரூ.5க்கு எலுமிச்சை சாதம், ரூ.3க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது.

முதல்வர் அறிவிப்பு

முதல்வர் அறிவிப்பு

அம்மா உணவகங்களில் மாலை நேர உணவாக ரூ.3க்கு 2 சப்பாத்திகள், பருப்பு கடைசல் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி உணவகங்களில் சப்பாத்தி வழங்கும் வேலையில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

எந்திரங்கள்

எந்திரங்கள்

சென்னையில் உள்ள 14 மையங்களில் ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்கும் நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களில் சோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்திகள் தரமானதாகவும், சுவையானதாகவும் வந்துள்ளன.

நாளை துவக்கம்

நாளை துவக்கம்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.3க்கு 2 சப்பாத்திகள், பருப்பு கடைசல் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா நாளை துவக்கி வைக்கிறார். அவர் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

கோதுமை

கோதுமை

சப்பாத்தியை தயாரிக்க தேவைப்படும் கோதுமையை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் வழங்குகிறது. சப்பாத்தி தயாரிக்கும் எந்திரங்களை கோவையைச் சேர்ந்த தனியார் கேட்டரிங் நிறுவனம் ஒன்று கொள்முதல் செய்து வழங்கியதுடன் சப்பாத்தி தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது என்று மாநாகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சப்பாத்தி

சப்பாத்தி

அம்மா உணவகங்களில் வழங்கப்படவிருக்கும் சப்பாத்தி ஒன்று 6 அங்குலம், 30 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள 40 மில்லி கிராம் பருப்பு கடைசல் வழங்கப்படும்.

பார்சல் இல்லை

பார்சல் இல்லை

சப்பாத்தி, பருப்பு கடைசல் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இருப்பு இருக்கும் வரை வழங்கப்படும். காலை மற்றும் மதிய உணவுகளை போன்றே மாலை உணவும் பார்சல் வழங்கப்படமாட்டாது.

2,000 சப்பாத்திகள்

2,000 சப்பாத்திகள்

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ஒவ்வொரு அம்மா உணவகங்களுக்கும் தினமும் 2,000 சப்பாதிகள் வழங்கப்படும். ஒரு கிலோ கோதுமை மாவில் 40 சப்பாதிகள் தயாரிக்கப்படுகிறது.

English summary
2 chapatis with dhal will be given for Rs. 3 at Amma Unavagams in Chennai from tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X