For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை கட்டட விபத்து- பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் தொழிலாளர் இன்று மரணமடைந்த நிலையில் இன்னொரு உயிர்ப் பலியும் ஏற்பட்டுள்ளது.

4வது நாளாக இன்றும் இடைவிடாமல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன

நேற்று இரவு வரை 20 பேர் பலி

நேற்று இரவு வரை 20 பேர் பலி

நேற்று இரவு வரையிலான மீட்புப் பணி நிலவரம் குறித்த தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைச்சாமி கூறுகையில், இதுவரை 20 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்

5 பேரின் அடையாளம் தெரியவில்லை

5 பேரின் அடையாளம் தெரியவில்லை

இதில் 15 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. 5 பேரின் அடையாளம் தெரியவில்லை.

6 தமிழகம், 5 ஆந்திரா, 4 ஒடிஷா

6 தமிழகம், 5 ஆந்திரா, 4 ஒடிஷா

இறந்த 15 பேரில் ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 5 பேர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் ஒடிஷாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர் என்று கூறியிருந்தார்..

29 பேர் பலி

29 பேர் பலி

இன்று காலை வரை 27 பேர் இறந்திருந்தனர். இந்த நிலையில் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமி என்ற பெண் தொழலாளர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் ஒரு மரணமும் ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

ஆண் – பெண் மீட்பு

ஆண் – பெண் மீட்பு

இந்த நிலையில் கிட்டத்தட்ட 40 மணி நேரமாக இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் பெண் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.

23 பேர் உயிருடன் மீட்பு

23 பேர் உயிருடன் மீட்பு

தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் படையினர் தொடர்ந்து முழு வீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை உயிருடன் 23 பேரை அவர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமாண்டோக்கள்

கமாண்டோக்கள்

சென்னை நகர போலீஸ் கமாண்டோக்கள், தீயணைப்புப் படையினர், ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளிட்டோரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் 33 பேரின் கதி என்ன…

இன்னும் 33 பேரின் கதி என்ன…

அரசு கூறும் கணக்குப்படி பார்த்தால் இன்னும் 33 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

சிரஞ்சீவி வருகை

சிரஞ்சீவி வருகை

இதற்கிடையே, நேற்று முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி விபத்து நடந்த நேரில் பார்வையிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் விபத்தில் சிக்கி மீண்ட ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்களையும் பார்த்து நலம் விசாரித்தார்.

இடியாத கட்டடமும் ஆபத்தானதே

இடியாத கட்டடமும் ஆபத்தானதே

இதற்கிடையே, தற்போது இடியாத நிலையில் பக்கத்தில் உள்ள இன்னொரு 11 மாடிக் கட்டடமும் கூட ஆபத்தானதே என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

English summary
Nine more bodies have been recovered yesterday and taking the toll in the collapse of the under construction multi-storeyed building here to 20 while two persons were pulled out alive as the massive non-stop rescue efforts stretched into the third day. "So far, 20 persons have died, 15 identified and five yet to be identified. Out of the 15, six belong to Tamil Nadu, five to Andhra Pradesh and four are from Odisha," Tamil Nadu Director of Public Health Dr K Kulandaisamy told PTI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X