அண்ணா, எம்ஜிஆர், ஜெ. சமாதிகளை பீச்சிலிருந்து அப்புறப்படுத்துங்க.. டிராபிக் ராமசாமி அதிரடி வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலோர ஒழுங்கு முறை விதிகளின்படி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை இடமாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

அண்ணா, எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகிய முதல்வர்களுக்கு அண்ணா சமாதியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இந்நிலையில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ளார்.

 இன்று விசாரணை

இன்று விசாரணை

அந்த வழக்கானது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் மெரினாவில் உள்ளன.

 500 மீட்டர் தூரத்தில்

500 மீட்டர் தூரத்தில்

இதில் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்ட அனுமதித்துள்ளது. கடலோர ஒழுங்கு முறை சட்டத்தின்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் எந்தவித கட்டுமானங்களுக்கு இருக்க கூடாது என்பது விதியாகும்.

 சமாதிகளை மாற்ற வேண்டும்

சமாதிகளை மாற்ற வேண்டும்

எனவே இது மத்திய அரசின் சட்டத்தை மீறும் செயலாகும்.தேசப்பிதா காந்தியடிகளுக்கு மண்டபமானது கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இவர்களின் சமாதிகளை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 தமிழக அரசிடம் விளக்கம்

தமிழக அரசிடம் விளக்கம்

இந்த மனு மீது விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அப்போது 2 வார அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசின் வழக்கறிஞர் கெடு கேட்டுள்ளதை அடுத்து இந்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai HC asks TN government a suitable reply on shifting Anna, MGR, Jayalalitha's memorials to Gandhi Mandapam.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X