தேவையில்லாத காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை ஏன் பணியமர்த்துகிறீர்கள்- நீதிபதி நறுக்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காவலர்கள் விவகாரத்தில் தமிழக அரசை விளாசிய உயர்நீதி மன்றம்- வீடியோ

  சென்னை: தேவையில்லாத காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை ஏன் பணியமர்த்துகிறீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாககன் கேள்வி எழுப்பினார்.

  காவலர்களின் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

  காலி பங்களாக்கள்

  காலி பங்களாக்கள்

  அப்போது கிருபாகரன் தமிழக அரசை சாடி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் தேவையில்லாமல் காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை பணியமர்த்துகிறீர்கள்.

  சமாதிகளில்...

  சமாதிகளில்...

  அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் செல்லும் சாலைகளில் காவலர்களை கால் கடுக்க நிற்க வைக்காதீர். மனித உரிமை செயல்களில் ஈடுபட்டாலும் காவலர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கடுமையான கேள்விகளை நீதிபதி முன்வைத்துள்ளார்.

  போலீஸார் குவிப்பு

  போலீஸார் குவிப்பு

  தற்போது போயஸ் கார்டனிலும் ஜெயலலிதா நினைவிடத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் தேவையில்லாத இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பிரச்சினைக்குரிய இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் மற்ற காவலர்களுக்கு பணிச்சுமை கூடுகிறது.

  நெருக்கடி

  நெருக்கடி

  இதனால் கடந்த வாரம் ஜெயலலிதா சமாதியில் ஆயுதப்படை காவலர் அருள் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் பணிச்சுமையாலும், உயரதிகாரிகளின் நெருக்கடிகளாலும் ஏராளமான தற்கொலைகள் நடந்துள்ளன.

  ராஜினாமா

  ராஜினாமா

  இவற்றை மனதில் வைத்தே நீதிபதி இன்று தமிழக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பி, காவலர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறியுள்ளார். தற்போது பாரதி என்ற காவலர் ஒருவர் பணிச்சுமை காரணமாக வேலையை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai HC Judge Kirubakaran asks that why Police force deploys in Memorials and Vacant Bungalows?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற