காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் நாடு தாங்குமா: தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காவலர்கள் விவகாரத்தில் தமிழக அரசை விளாசிய உயர்நீதி மன்றம்- வீடியோ

  சென்னை: காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகம் என்னவாகும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

  காவலர்கள் மன அழுத்தம் தொடர்பாக பணியை கைவிடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகிவிட்டது. அவர்களின் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

  Chennai HC says that rest to be needed for police

  அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும். 24 மணி நேரமும் பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஓய்வு தேவை.

  குடும்ப விழா, பண்டிகை காலங்களில் காவலர்களுக்கு விடுப்பு அளிப்பதில்லை.
  காவல் துறையில் 19,000 காலிப்பணியிடங்கள் இருப்பது உண்மையா?

  மன அழுத்தம் காரணமாக காவலர்கள் பணியை கைவிடுகின்றனர் , இல்லாவிட்டால் தற்கொலை செய்கின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டு காவலர்களுக்கு தனி ஆணையம் என்ற உத்தரவு என்னவாயிற்று, இன்னும் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.

  காவலர்களுக்கான ஆணையம் 6 ஆண்டுகளாக அமைக்கப்படாததால்தான் மரணங்கள் அதிகரித்தன. காவலர் ஆணையம் தொடர்பாக வரும் 19-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai HC judge Kirubakaran says that rest to be needed for Policemen. If they strike for one hour think what will happen for Tamilnadu, he asks TN government.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற