சந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்க தாக்குதலுக்குள்ளான வக்கீல் தரப்பு ஹைகோர்ட்டில் எதிர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

பணம் கொடுக்கல் வாங்கள் தகராறில் பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்த் என்பதை நடிகர் சந்தானம் தாக்கினார். இதுதொடர்பாக அவர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Chennai high court postponed Actor Santhanam anticipatory bail case to tomorrow

இதையடுத்து கைது நடவடிக்கை பயந்து நடிகர் சந்தானம் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்தமனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்க பிரேம் ஆனந்த் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை சென்னை ஹைகோர்ட் நாளைக்கு ஒத்திவைத்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Santhanam anticipatory bail case postponed to tomorrow. Actor Sathanan abscond in the case of Attacking a lawyer.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற