ஹை ஜாலி.. இன்னிக்கு சாயந்திரம் சென்னையில் மழை பெய்யுமாம்.. ஜில் ஜில் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலையில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் சீசனை அனுபவிக்க பயணிகள் குவிந்து வருகின்றனர். கோடை காலம் முடிந்தும் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி தகித்தது.

Chennai may receive rainfall today evening

சில தினங்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. நேற்று இரவு 7 மணிக்கு மேல் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ததால் குளுமை பரவியது.

இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அதிகபட்சமதக 80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Weathermen have forecast Some areas in Chennai like received rain on Saturday. Tirupuvanam in Sivaganga got heavy rainfall of 80 mm rainfall. Part of Ramanathapuram too will continue to get rains.
Please Wait while comments are loading...