தென் தமிழக கடலோர மாவட்ட மக்களுக்கு ஒரு குளு, குளு செய்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குமரி அருகே உருவான புதிய தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்பு- வீடியோ

  சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  வடகிழக்கு பருவ மழை அந்தஅளவுக்கு பலன் கொடுக்கவில்லை. தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் ஆங்காங்கே தண்ணீர் பிரச்சினை தலைவிரிக்க தொடங்கிவிட்டது.

  Chennai MET says that South TN coastal districts will get rainfall

  இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில் தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மாற்றமடையும். இதனால் தென் தமிழக கடலோர மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

  சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குமரி மாவட்ட கடலோரத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இது அதிகபட்சமாக 60 கி.மீ. தூரம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவிறுத்தியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai Metrological Department says that South TN coastal districts will get moderate rainfall.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற