For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர்ப் பஞ்சம்... காசு கொடுத்து வாங்கும் சென்னை மக்கள்.. மாதம் ரூ. 300 + செலவாகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மாதம் குறைந்தது 300 ரூபாய்க்கு மக்கள் குடிநீர் வாங்கும் நிலை உள்ளது. இதனால் மினரல் கேன் வாட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

சென்னை நகருக்கு தினமும் 834 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் குடிநீர் வாரியம் 580 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான் வினியோகம் செய்து வருகிறது. அதுவும் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் பல பகுதிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது.

குடிநீர் வாரியத்தில் முன் பதிவு செய்து லாரியை வரவழைக்க சிறிய லாரிக்கு 400 ரூபாய் பணம் கட்ட வேண்டும். தண்ணீர் ஊற்றும் டிரைவருக்கு 50 ருபாய் டிப்ஸ் கொடுக்க வேண்டும்.

லாரிக்கும், டிரைவருக்கும்:

லாரிக்கும், டிரைவருக்கும்:

பெரிய லாரிக்கு ரூபாய் 600 கட்ட வேண்டும். டிரைவருக்கு 100 ரூபாய் டிப்ஸ் கொடுக்க வேண்டும். இதுதான் நடைமுறையில் உள்ளது.ஓரளவு வசதி படைத்தவர்கள் பணம் கட்டி லாரி தண்ணீரை வரவழைக்கிறார்கள். நடுத்தர மக்கள் சிண்டெக்ஸ் டேங்கர் தண்ணீரை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள்.

ஒரு குடம் 2 ரூபாய்:

ஒரு குடம் 2 ரூபாய்:

வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், மேட்டுக்குப்பம், சரஸ்வதி நகரில் குடிதண்ணீர் 1 குடம் 6 ரூபாய்க்கும், வீட்டு உபயோகத்துக்கான சாதா தண்ணீர் 1 குடம் 2 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கேன் வாட்டர்தான் குடிக்க:

கேன் வாட்டர்தான் குடிக்க:

இதே போல் ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் சிறிதளவாவது பணம் செலவழித்துதான் குடிநீர் வாங்குகிறார்கள். கடந்த சில வருடங்களாகவே சென்னை மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கேன் வாட்டர் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். குடிப்பதற்கு மட்டும் இதை பயன்படுத்துகின்றனர்.

மாதம் 300 ரூபாய்:

மாதம் 300 ரூபாய்:

20 லிட்டர் கேன் வாட்டர் ரூபாய் 30க்கு விற்கப்படுகிறது. இதை வாங்கி 3 நாட்கள் உபயோகப்படுத்துகின்றனர். இந்த வகையில் மாதம் ரூபாய் 300 வரை கேன் வாட்டருக்கு மக்கள் செலவழிக்கிறார்கள். சென்னையில் ஆங்காங்கே குடிநீரில் கழிவுநீர் கலப்பது, குளோரின் கலந்து தண்ணீர் வருவது ஆகிய காரணங்களால் மக்கள் கேன் வாட்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

போர்வெல் இருப்பவர்கள் காட்டில் மழை:

போர்வெல் இருப்பவர்கள் காட்டில் மழை:

போர்வெல் மூலம் நல்ல தண்ணீர் கிடைக்கும் வீடுகளில் அதை குடிக்க பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் பணம் கொடுத்துதான் குடிநீர் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் 20 லிட்டர் கேன் விற்பனை அதிகரித்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் கேன் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் 320 உண்டு. இந்த ஆண்டு இது 375 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பூந்தமல்லி, குன்றத்தூர், பெரியபாளையம், பருத்திப் பட்டு பகுதிகளில் அதிக அளவில் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.

புதுசா இருந்த 5 ரூபா எக்ஸ்ட்ரா:

புதுசா இருந்த 5 ரூபா எக்ஸ்ட்ரா:

இதே போல் ஜூன் மாதம் பாக்கெட் குடிநீர் 1.2 கோடி லிட்டர் அளவுக்கு தினமும் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டது. இது ஜூலை மாதத்தில் 1.4 கோடி லிட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது. மினரல் வாட்டர் கேன் புது கேனாக இருந்தால் கடைக்காரர்கள் அதற்கு 5 ரூபாய் அதிகம் வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai people suffered by water problem, they spent 300 rupees for drinking water for every month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X