பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னையில் இளைஞர் அதிரடி கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கன்னியாகுமரியைச் சேர்ந்த அன்சார் மீரான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட் சேர்த்தல் மற்றும் உளவு தகவல்களை அனுப்பி வந்த அன்சார் மீரான் என்பவை போலீசார் கைது செய்தனர். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்,

Chennai police arrests Pakistan Spy

அன்சார் மீரானை பூவிருந்தவல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர் பாண்டியன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இதனிடையே தேசிய புலனாய்வு பிரிவினர் அன்சார் மீரானை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அன்சார் மீரான் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். அவருடன் தொடர்புடைய முன்னாள் பேராசிரியர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Chennai Police arrested a Pakistan spy from Kanyakumari.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற