மெட்ரோ ரயில்... கருணாநிதிக்கு பாராட்டு விழா- தி.மு.க. கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்த இருந்த பொதுக்கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு பொதுக்கூட்டம் நடத்த ஆலந்தூர் பகுதி தெற்கு தி.மு.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஆலந்தூர் நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தி.மு.க. பகுதி செயலாளர் என்.சந்திரன் பரங்கிமலை போலீசில் மனு அளித்தார்.
ஆனால் இந்த இடம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட பகுதி கிடையாது. எனவே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என போலீசார் மறுத்துவிட்டனர்.
கடந்த ஜூன் 1-ந் தேதி இந்த இடத்தில் தான் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது போலீசார் அனுமதி மறுத்துவிட்டதால் நீதிமன்ற உதவியை நாட உள்ளதாகவும் தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications