ரூ. 20 டோக்கனுக்கு பணம் கேட்டு நச்சரிப்பு... வாக்காளர்களை தாக்கிய தினகரன் ஆதரவாளர்கள் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரூ. 20 டோக்கனுக்கு பணம் கேட்டு நச்சரிப்பு...வீடியோ

  சென்னை : ஆர்கே நகர் தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதாக கூறிய தினகரன் ஆதரவாளர்களிடம் வாக்காளர்கள் பணம் கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் கைகலப்பானதையடுத்து 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிறது.

  சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் டிடிவி. தினகரன் அமோக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்வதாக உறுதியளித்ததே காரணம் என்று சொல்லப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையிலும் கூட வாக்காளர்கள் பலர் 20 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு பணம் கேட்டு வருவதாக பாஜக, தமிழக துணை முதல்வர் உள்ளிட்டோர் நேற்று கூறினர்.

  Chennai RK Nagar police arrested 4 persons who attacked voters

  இந்நிலையில் பணம் கேட்டு நச்சரித்து வந்த வாக்காளர்களுக்கு தினகரன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றி வாக்காளர்களை தினகரன் ஆதரவாளர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வேலு, பாலாஜி, ஜான்பீட்டர், சரண்ராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai RK Nagar police arrested 4 persons who attacked voters , whom seeking money for voting in favvour of TTV. Dinakaran in the by elections

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X