சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்- மாவட்ட ஆட்சியர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

Chennai Schools Reopen today: Says district Collector

இதனால் சென்னை ஆட்சியர் அன்புசெல்வன் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் பள்ளிகள் வழக்கம்போல் துவங்கும்போது பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கவில்லை என உறுதிப்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் நன்கு உள்ளது என்பதையும், வகுப்பறைகளில் மின்கசிவு இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி சான்றளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.

அதனால் இன்று பள்ளிகள் இயங்குமா? என்கிற கேள்வி பெற்றோரிடம் எழுந்தது. அதுபோல, மழை பெய்தால் விடுமுறை அறிவிப்பது குறித்து காலை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சொல்லி இருந்தனர்.

Chennai Schools Reopen today: Says district Collector

இன்று அதிகாலை ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ஐந்து நாட்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரிகளின் ஆலோசனையின்படி பள்ளிகளில் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, 9 பள்ளிகள் தவிர்த்து இன்று சென்னையில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai Schools to be re-opened today after a week. Nine schools to remain closed because of stagnant water in the premises.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற