நீதிமன்ற உத்தரவு ஒருதலைப்பட்சமானது... சிஐடியூ தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் கருத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமனற்ம் உத்தரவு பிறப்பித்துள்ளது ஒருதலைபட்சமானது என்று சிஐடியூ தொழிற்சங்கத்தின் செயலாளர் சவுந்தரராஜன் கூறியுள்ளார். தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக வழக்கறிஞர் வாராகி என்பவர் தொடர்ந்த அவசர வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக பணிக்குத்திரும்ப உத்தரவிட்டுள்ளனர். மேலும் இவர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக அரசு நோட்டீஸ் அளித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

CITU Soundarrajan says that Highcourt's order is one sided

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சிஐடியூ தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலைபட்சமாக இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் வேலைநிறுத்தத்தால் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது கஷ்டமான விஷயம் தான், ஆனால் ஜனநாயக நாட்டில் எங்களின் உரிமைகளுக்காகவே போராடுகிறோம்.

வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் எந்த வகையிலும் பொறுப்பல்ல, அரசு தான் இதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். தொழிலாளர்களின் ரூ. 7 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து அரசு செலவு செய்து விட்டு அதை திருப்பி கேட்கும் எங்களுக்குத் தர மறுக்கிறது, என்பதற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம்.

ஒரு நடத்துனர் அன்றைய வசூல் பணத்தை எடுத்து தனது சொந்த குடும்ப செலவிற்கு பயன்படுத்தினால், இந்த நிர்வாகமும், நீதிமன்றமும் கேள்வி கேட்காமல் இருக்குமா. அதைத் தான் நாங்களும் கேட்கிறோம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CITU Soundarrajan says that Highcourt's order is one sided, and the strike is not by employees and it is by the government's compulsion.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற