For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்களுக்கு நலத் திட்டங்கள்: முதல்வர் ஜெ. அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 160 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும், 100 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கும் என மொத்தம் ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 260 நிராவி கொதிகலன்கள் வாங்கி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.

வலுவான பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவை அளிப்பதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நிரந்தரமான மாறுதலை ஏற்படுத்த இயலும் என்பதால் எனது தலைமையிலான அரசு, அதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றை செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியரின் கல்வி சார்ந்த திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், நடப்பாண்டில் பின்வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீராவி கொதிகலன்கள்

நீராவி கொதிகலன்கள்

ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு தயாரித்து வழங்குவதில் உள்ள சிரமத்தினைக் குறைக்கும் வகையில், நடப்பாண்டில், 160 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும், 100 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கும் என மொத்தம் ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 260 நிராவி கொதிகலன்கள் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதி மாணவர்கள்

விடுதி மாணவர்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகள் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப தட்டு மற்றும் டம்ளர்களை பயன்படுத்தி வருகின்றனர். மாணவ-மாணவியரிடம் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் நோக்கத்தில், 1,314 ஆதி திராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 98,039 மாணவ-மாணவியருக்கு, 1 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் விடுதிகள்

மகளிர் விடுதிகள்

பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர், தங்கள் பணி காரணமாக இருப்பிட மாவட்டங்களையும், குடும்பங்களையும் விட்டு பிற மாவட்டங்களுக்குச் சென்று தங்கி பணிபுரியும் போது பாதுகாப்புடனும், கவலையின்றியும், தங்கிப் பணிபுரிவதற்கு ஏதுவாக மகளிர் விடுதிகள் துவங்குவது அவசியமாகும்.

ரூ.4 கோடியே 40 லட்சம்

ரூ.4 கோடியே 40 லட்சம்

முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகள் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேல்நிலைப்பள்ளிகள்

மேல்நிலைப்பள்ளிகள்

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியர் உயர்கல்வி பயில நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே மேல்நிலைக் கல்வி பயில்வதற்கும், விரும்பும் பாடப் பிரிவில் சேர்வதற்கும் ஏதுவாக வரும் கல்வியாண்டில் 5 ஆதிதிராவிடர்-பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக ரூ.2 கோடியே 54 லட்சம் செலவில் நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தரம் உயர்த்தப்படும்

தரம் உயர்த்தப்படும்

இதே போன்று, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே பள்ளிக் கல்வியை தொடர ஏதுவாகவும், இடை நிற்றலை தவிர்க்கும் நோக்குடனும், வரும் கல்வியாண்டில் 15 ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக ரூ.2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாதிரி உண்டி உறைவிடப்பள்ளி

மாதிரி உண்டி உறைவிடப்பள்ளி

சேலம் மாவட்டம் அபினவம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வெள்ளி மலையில் 2 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதே போன்று, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 32,813 பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் உதக ண்டலத்தில் உள்ள முத்தோரை பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில், ரூ.2 கோடி செலவில் மாதிரி உண்டி உறைவிடப் பள்ளி ஒன்று தோற்றுவிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்மார்ட் கிளாஸ்

ஸ்மார்ட் கிளாஸ்

பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில், அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டதை போன்று பழங்குடியினர் உண்டி உறைவிட, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடியே 31 லட்சம் செலவில் 26 பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
Chief Minister J.Jayalalitha has announced Tamil Nadu Legislative Assembly Rule 110 on new schemes for the welfare of Adi Dravidar and Tribal Welfare Schools
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X