முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிதி உதவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

சேலம் சாமிநாதபுரத்தை சேர்ந்த ஜீவானந்தத்தின் மகன் முத்து கிருஷ்ணன். 30 வயதான இவர் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலை கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்தார்.

CM announces 3 lakhs for Muthukrishnan family

ஹோலி கொண்டாட்டத்திற்காக டெல்லி முனிர்கா என்ற இடத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். இந்த தற்கொலை குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் பெற்றோர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தவிட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து முத்துக்கிருஷ்ணன் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு அனைத்து உதவி செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil nadu Chief Minister Edapadi Palanisamy announced 3 lakhs relief fund for Muthukrishnan family.
Please Wait while comments are loading...