தமிழ் பேராசிரியர் மா.நன்னன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த தமிழ் பேராசிரியர் மா.நன்னனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

மா.நன்னனுக்கு முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான மா.நன்னன் மறைவு செய்தியை கேட்டு துயரமடைந்தேன்.

 CM Edappadi Palanisamy extended his condolence for Ma.Nannan's death

தொடக்க பள்ளி ஆசிரியராக தனது பணியை தொடங்கி நன்னன் முனைவர் பட்டம் பெற்று கலை கல்லூரி, மாநில கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார். மேலும் நன்னன் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநராக பணியாற்றியதோடு எழுத்தறிவித்தல் முறையில் நன்னன் முறை என்ற புதிய முறையை உருவாக்கிய பெருமைக்குரியவராவார்.

நன்னன் தவறின்றி தமிழ் எழுதுவோம், எல்லாா்க்கும் தமிழ் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தனது எழுத்து பணிக்காக பெரியார் விருது, தமிழ் செம்மல் விருது, திரு.வி.க. விருது போன்ற விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

தமிழ் மொழி மீது நீங்கா பற்று கொண்டவரும், அன்பாக பழகக்கூடிய பண்பாளர் பேராசிரியர் நன்னனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரழிப்பாகும். பேராசிரியர் நன்னனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தமிழ் இலக்கியத்துறை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொண்டு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edappadi Palanisamy extended his condolence for the death of Ma.Nannan who was a Tamil Professor.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற