மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் முதல்வரின் பதிலில் திருப்தியில்லை... வெளிநடப்பு செய்த தனியரசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் முதல்வரின் பதிலில் திருப்தியில்லை என சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எம்எல்ஏ தனியரசு குற்றச்சாட்டியுள்ளார். பாசிச சிந்தைனையை பாஜக தேசத்தில் விதைத்துள்ளதாகவும் தனியரசு எம்எல்ஏ தெரிவித்தார்.

மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக திமுக சார்பில் சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை எனக்கூறி திமுக உறுப்பினிர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் வெளிநடப்பு செய்தனர். எம்.எல்.ஏ.க்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் பதிலில் திருப்தியில்லை

முதல்வர் பதிலில் திருப்தியில்லை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ தனியரசு, மாட்டிறைச்சி விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தி இல்லை எனக்கூறினார். மக்களின் உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு தடை விதிப்பதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு தடை செய்வதா?

மத்திய அரசு தடை செய்வதா?

விவசாயிகளின் கால்நடை வளர்ப்பை மத்திய அரசு தடை செய்வதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இப்படி தடைவிதித்தால் எப்படி விவாசயிகள் மாடுகளை விற்பனை செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கவனத்தை ஈர்க்கவே வெளிநடப்பு

கவனத்தை ஈர்க்கவே வெளிநடப்பு

மாட்டிறைச்சி விவகாரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கவே வெளிநடப்பு செய்ததாகவும் அவர் கூறினார். இறைச்சிகளை உண்ணுவது தனிமனித உரிமை என்றும் அவர் கூறினார்.

பாஜகவின் பாசிச சிந்தனை

பாஜகவின் பாசிச சிந்தனை

மத்திய அரசின் தடையால் கால்நடை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாசிச சிந்தைனையை பாஜக தேசத்தில் விதைத்துள்ளதாகவும் தனியரசு எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MLA Thaniyarasu accuses that CM's stand on beef issue is not satisfied. He said eating beef is individual rights.
Please Wait while comments are loading...