For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகள் பலியானதை கூட எங்களிடம் சொல்லவில்லை.. கோவை மாணவியின் பெற்றோர் கண்ணீர் பேட்டி

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை மாணவியின் பெற்றோர் கண்ணீர் பேட்டி- வீடியோ

    கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பலியான மாணவியின் மாணவி லோகேஸ்வரியின் பெற்றோர் கண்ணீர் பேட்டி அளித்துள்ளனர். மகள் பலியானதை கூட தங்களிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று அந்த மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

    தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்றதனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. பயிற்சியாளர் ஆறுமுகம், பேரிடர் காலத்தில் எப்படி தப்பிப்பது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    தீ விபத்து சம்பவத்தின் போது எப்படி மாடியில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்க வேண்டும் என்றும் கற்றுத்தந்தனர். ஒவ்வொரு மாணவர்களையும் அழைத்து வந்து பயிற்சி அளித்து இருக்கிறார்கள்.

    கட்டாயம்

    கட்டாயம்

    இந்த சம்பவத்தின் போது, பி.பி.ஏ. 2-ம் ஆண்டு லோகேஸ்வரியை அழைத்து பயிற்சி அளித்து இருக்கிறார்கள். அந்த மாணவி பயிற்சி பயணத்தில் ஒத்துழைக்க மறுத்து இருக்கிறார். அப்போதும் கூட, அவரை கட்டாயப்படுத்தி பயிற்சிக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவரது உடலில் கயிறை கட்டி கீழே இருக்கும் வலையில் குதிக்க சொல்லி இருக்கிறார்கள்.

    குதிக்க பயம்

    குதிக்க பயம்

    அவர் குதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதன்பின் ஆறுமுகம் அவரை கட்டாயப்படுத்தி இருக்கிறார். பின் லோகேஸ்வரியிடம் பேசி, அவருக்கு தைரியத்தை கொடுத்து கீழே குதிக்க வைத்துள்ளார். இதில் கீழே விழும் போது, அந்த மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு கீழே விழுந்துள்ளார்.

    மரணம் அடைந்தார்

    மரணம் அடைந்தார்

    இதன் பின் அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை செய்ய முடியாது கஷ்டம் என்றதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். ஆனால் அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார்.

    தகவல் இல்லை

    தகவல் இல்லை

    இது தொடர்பாக அந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து அளித்த பேட்டியில், காலையில் கல்லூரி இருக்கிறது என்று கூறிவிட்டு சென்றாள், பரீட்சை இருக்கிறது என்று படித்துவிட்டு சென்றாள், ஆனால் அங்கு இப்படி ஓர் விஷயம் நடக்கும் என்று எங்களிடம் யாரும் சொல்லவில்லை. இந்த பயிற்சி இருக்கிறது என்று கூறவில்லை.

    பயிற்சியாளர் கைது

    பயிற்சியாளர் கைது

    எங்களுக்கே மாலைதான் லோகேஸ்வரி இறந்தது தெரியும். கல்லூரியில் இருந்து யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டோம். கல்லூரியில் இருந்து யாரும் எங்களிடம் பேசவில்லை. விஷயம் தெரிந்து மகளை பார்த்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளேன்.இதுகுறித்து எங்களிடம் யாருமே பேசவில்லை என்று கூறியுள்ளார். தற்போது பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அந்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    English summary
    Coimbatore Girl Death: No one has informed the death of my child says, Logeshwari's father. A Girl student named Logeshwari dies during Disaster management training in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X