For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வக்கீல் நாகராஜன் வசமாகுமா கோவை தொகுதி?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Coimbatore LS constituency AIADMK candidate Bio Data
கோவை: கோவை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாகராஜன் (52) மாணவர் பருவத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறார்.

கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவராகவும், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளராகவும் தொகுதி அதிமுகவினரிடையே அறிமுகமானவர்.

சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் பழனிக்கவுண்டர். தாயர் பெயர் அங்கம்மாள். இவருடன் பிறந்தவர்கள் 4 பேர்.

மனைவியும் பட்டதாரி

வேட்பாளர் நாகராஜனின் மனைவி பெயர் சாந்தி. முதுகலை பட்டதாரி. ஹரிபிரிய தர்ஷினி என்ற மகளும், விஜய் என்ற மகனும் உள்ளனர். ஹரிபிரியதர்ஷினி பி.இ முதலாம் ஆண்டு படிக்கிறார். விஜய் 10ம் வகுப்பு படிக்கிறார்.

சட்டம் பயின்றவர்

நாகராஜன், சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல் படித்தார். 2001 முதல் 2006ம் ஆண்டு வரை கோவை மாவட்ட செசன்ஸ் கோர்ட் அரசு வக்கீலாக பணிபுரிந்தார்.

அரசு வக்கீலாக

2011ல் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவி வகித்து வருகிறார். இதற்கிடையில், 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை ‘பார்‘ கவுன்சில் உறுப்பினராக இருந்தார்.

வழக்கறிஞர் பிரிவு

கோவை மாநகர் மாவட்ட அதிமுகவில், கவுண்டம்பாளையம் தொகுதி கிளை செயலாளராகவும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு அணி தலைவராகவும் உள்ளார்.

English summary
The All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) has given its ticket to Nagarajan in Coimbatore Lok Sabha Constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X