கோவை பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால், அணையிலிருந்து 12,000 நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ளது பில்லூர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி. தற்போது 90.4 அடி நீர்மட்டத்தை எட்டி, அணை முழுவதுமாக நிரம்பிய நிலையில் உள்ளது.

Coimbatore Pillur dam filled with maximum water

அதையடுத்து, அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பாவனி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையால், பாவனி ஆற்றங்கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை நன்கு பெய்த காரணத்தால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பிவிட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடிக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் விவசாயிகளும் அணைகள் நிரம்பியதைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Coimbatore Pilluyr Dam reached its maximum height and water is opened from pillur dam. Due to this opening, Bhavani river is flooded.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற