For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவாஜி படத்தை அப்படியே பின்பற்றிய ரஜினி.. அரசியல் அறிவிப்பிற்கு இதுதான் காரணமா?

சிவாஜி படத்தில் ரஜினி செய்யும் அனைத்து விஷயங்களும் தற்போது நிஜமாக அவரது வாழ்வில் நடந்து வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.. நிரூபித்த ரஜினிc

    சென்னை: நடிகர் ரஜினி தனது அரசியல் அறிவிப்பை இன்று காலை வெளியிட்டார். இவர் அறிவிப்பை தொடர்ந்து ராகவேந்திரா மண்டபம் தொடங்கி ஜப்பான் வரை அவரது ரசிகர்கள் சந்தோச மிகுதியில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    அரசியல் கட்சி ஆரம்பித்து என்னவெல்லாம் செய்ய போகிறேன் என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவரது அரசியல் அறிவிப்பிற்கும் அவர் நடித்த சூப்பர் ஹிட் சிவாஜி படத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    அந்த படத்தில் நடக்கும் பல முக்கிய விஷயங்கள் தற்போது அவர் நிஜ வாழ்விலும் அப்படியே நடந்து வருகிறது.

    சிஸ்டம் மாத்தணும்

    சிஸ்டம் மாத்தணும்

    சிவாஜி படத்திலும் ரஜினிக்கு அரசியல் சிஸ்டம்தான் தொந்தரவாக இருந்தது. ''பணக்காரன் பணக்காரன் ஆகிட்டே போறான் ஏழை ஏழை ஆகிட்டேன் போறான்'' என சிஸ்டம் பற்றி வசனம் கூட பேசி இருப்பார். அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் அவர் அரசியல் சிஸ்டத்தை குறி வைத்து பேசியுள்ளார். அதற்கு எதிராக அரசியல் செய்வேன் என்று கூறியுள்ளார்.

    தொண்டர்கள் இல்லை

    தொண்டர்கள் இல்லை

    சிவாஜி படத்தில் அவர் 'பாஸ்' அவதாரம் எடுத்த பின் தன்னுடன் நிறைய பேரை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளை கட்டுப்படுத்துவார். அதேபோல் தற்போது நிஜத்திலும் தனது தொண்டர்கள் மக்களுக்கு காவலர்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதில் இருக்கும் படை போலவே அவரது படையும் செயல்பட வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

    கிராமங்கள் முழுக்க

    கிராமங்கள் முழுக்க

    அந்த படத்தில் அவர் கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு சேவை செய்வார். அதேபோல் இதிலும் கிராமங்களில் இருந்து வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். அதற்காக கிராமங்களிலும் தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் பேசி இருக்கிறார்.

    பதவியில் இருக்க மாட்டோம்

    பதவியில் இருக்க மாட்டோம்

    சிவாஜி படத்தில் மக்களுக்கு சேவை செய்துவிட்டு கடைசியில் அவர் ஜெயிலுக்கு செல்வதாக படம் முடியும். அதேபோல் கொஞ்சம் இதில் மாறுதலாக கூறியுள்ளார். மக்களுக்கு எந்த சேவையும் செய்ய முடியவில்லை என்றால் 3 வருடத்தில் பதவி விலகி விடுவேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

    English summary
    Rajini political entry and Sivaji movie has lot of similarities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X