காங்கிரஸ் 130வது ஆண்டு விழா... ராகுல் காந்தி "ஆப்சென்ட்"!
சென்னை: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130வது நிறுவன தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையிலும் சத்தியமூர்த்தி பவனில் கொடியேற்றி இதைக் கொண்டாடினர்.
டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால் துணைத் தலைவரான ராகுல் காந்தி வரவில்லை. அவர் வராததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
1885ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதிதான் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அது வரலாறு காணாத பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய தோல்வியையும் அது சந்தித்தது. சரியான தலைமை இல்லாமல் தடுமாறியும் வருகிறது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நடந்த பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அது பெரும் அடி வாங்கியுள்ளது. இந்த ஆண்டில் அது மகாராஷ்டிரா, ஆந்திரா, ஹரியானா ஆகிய மாநிலங்களை அது இழந்துள்ளது. கூட்டணியாக ஆட்சியில் இருந்து வந்த ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரிலும் அது தோல்வியைத் தழுவியது.
ஜம்மு காஷ்மீரில் அதன் கதை முழுவதுமாக முடிந்து விடவில்லை. அங்கு பாஜகவுக்கு எதிரான ஆட்சி அமைய காங்கிரஸ் உதவக் கூடிய நல்ல நிலையில்தான் உள்ளது. இது சற்று ஆறுதல் தரும் விஷயமாகும்.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த சோனியா காந்தி, ஆட்சியமைக்கும் அளவுக்கு அங்கு எங்களுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை. எனவே மற்றவர்கள்தான் அங்கு ஆட்சியமைப்பார்கள் என்றார்.
சென்னையில்...
சென்னையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அதற்கு முன்னர் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, குமரி அனந்தன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் கே. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஆரூண், விஜயதரணி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன், மகிளா காங்கிரஸ் தலைவி சாயிலட்சுமி, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கராத்தே தியாகராஜன், என். ரங்கபாஷ்யம் மற்றும் காங்கிரஸ் முன்னோடிகள், நிர்வாகிகள் ஆகியோர் பெருமளவில் பங்கெடுத்துக் கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications