For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐடி ரெய்டுகள் உணர்த்துவது என்ன? ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தொடரும் ஐடி ரெய்டுகள் மூலம் தமிழக அரசு பல்வேறு துறைகளில் ஊழல் செய்திருப்பது அம்பலமாகி உள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் பற்றி விசாரிக்க திமுக வழக்கு- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் தொடரும் ஐடி ரெய்டுகள் மூலம் தமிழக அரசு பல்வேறு துறைகளில் ஊழல் செய்திருப்பது அம்பலமாகி உள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். நெடுஞ்சாலைத்துறையில் கோடிக்கணக்கில் ஊழல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு சத்துணவு ஒப்பந்ததாரரான கிறிஸ்டி நிறுவனம் மோசடி செய்தது வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Continuous IT raid in TN, Stalin says that state government has filled with scams

    இந்த தொடர் சம்பவங்கள் குறித்து ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் மூன்று டிவிட்டுகள் மூலம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

    அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலங்கோல அ.தி.மு.க ஆட்சியில் சந்தி சிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரும் அவருடைய பினாமியுமான செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகளில் நடைபெறும் #IncomeTaxRaid -ம்,அங்கு கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரொக்கப்பணமுமே சாட்சி.

    தன்னுடைய உறவினர்கள், பினாமிகளுக்கு மட்டும் நெடுஞ்சாலைத் துறையின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கி விட்டு,வலிமைமிக்க #LokAyuktha அமைப்பில் "காண்டிராக்டுகளை விசாரிக்கக் கூடாது"என்ற தனிப்பிரிவை முதல்வர் அஞ்சி நடுங்கி ஏற்படுத்தியதன் பின்னணி தற்போது தெளிவாகிறது.

    கரூர் அன்புநாதன் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் மீதான தற்போதைய #IncomeTaxRaid வரை அனைத்து விசாரணைகளும் சட்டப்படி நடைபெற தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை அரசின் கஜானாவில் உடனடியாக சேர்க்க வேண்டும்!, என்றுள்ளார்.

    English summary
    Amidst continuous IT raid in Tamil Nadu, Stalin says that state government has filled with scams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X