தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தவில்லை என சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியாரின் 139-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செய்யாதது சர்ச்சையாகி உள்ளது.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பெரியார் பிறந்த நாளை மாபெரும் விழா போல் கொண்டாடினர்.

Controversy erupts over Edappadi tweets

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் தந்தை பெரியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆனால் தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தாதது சர்ச்சையாகி உள்ளது. அத்துடன் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து 2 மணிநேரம் கழித்தே தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுவும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A controversy erupted over Chief Minister Edappaadi palanisamy tweet on Periyar Birthday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற