For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாதி புயல் எதிரொலி: சென்னையில் தூறல் மழை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Rain
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மாதி புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சிறு தூறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் ‘மாதி' புயல் மையம் கொண்டுள்ளது. புயலால் அந்தமான் நிகோபார் தீவுகள், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று காலை முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லோசான தூறல் மழை பெய்யத் தொடங்கியது. நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், வடபழனி, தியாகராய நகரில் கனமழை பெய்து வருகிறது. பட்டினபாக்கம், மயிலாப்பூர், திருவல்லிகேனியிலும் சிறு சாரலுடன் மழை பெய்தது. சிறிது ஓய்வுக்குப் பின்னர் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது.

புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை, கடலூர், நாகை, பாமபன், புதுச்சேரி, காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

English summary
The cyclonic storm 'Madi' over Bay of Bengal has moved slightly north-westwards and lay centred at 500 km southeast of Chennai, bringing welcome rains in several parts of the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X