For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா சொல்லும் அந்த 4,992 மெகாவாட் மின்சாரம் எப்படி வந்துச்சு?.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்…!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி நடைபெற்ற போது 2008ம் ஆண்டு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. 4 மணிநேர மின்வெட்டு 2011ம் ஆண்டு 6 மணிநேரம் வரை நீடித்தது. இதுவே திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப காரணமாக அமைந்தது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தைக் கொண்டு வருவோம். மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று சூளுரைத்து ஆட்சி பொறுப்பேற்றார் ஜெயலலிதா. ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களுக்குப் பின்னர் ஓரளவு மின்வெட்டு சரியானது போல இருந்தது. மீண்டும் ‘பழைய குருடி கதவை திறடி' என்ற கதையாக மின்வெட்டு அமலுக்கு வந்தது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 6 மணிநேரம் என்றால் அறிவிக்கப்படாத மின்வெட்டு 10 மணிநேரமாக உயர்ந்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் என்ற உண்மையை தமிழகமே நன்கு அறியும்.

காற்று வீசி கை கொடுப்பதால் காற்றாலை மின்உற்பத்தி நடைபெறுகிறது. மின்வெட்டு அவ்வப்போது சரியாகி மக்களை புழுக்கத்தில் இருந்து காத்து வருகிறது. இந்தநிலையில் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா அதிமுக ஆட்சி காலத்தில் 4,999 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியதுதான் வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்த கதையாகிவிட்டது. ஊடகங்களில் அதுவே விவாதப் பொருளாகி விட்டது.

என்னத்த செஞ்சாங்க?

என்னத்த செஞ்சாங்க?

2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு புதிய உற்பத்தித் திட்டத்தை உருவாக்கி, நிறைவேற்றி, அதன் மூலம் இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதே குற்றச்சாட்டினை ஊடகங்களின் விவாத நிகழ்ச்சிகளிலும் முன்வைக்கப்பட்டது.

அம்மா ஆட்சியிலே

அம்மா ஆட்சியிலே

அதிமுகவில் இருந்து பேசிய பேராசிரியர் தீரன் வரிக்கு வரி அம்மா ஆட்சி காலத்தில் என்றுதான் சொன்னாரே தவிர பெரிதாக ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. 16 ஆண்டுகாலம் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவினர் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதுதான் அவரது குற்றச்சாட்டாக இருந்தது.

அதிமுக, திமுக யாருமே சரியில்லை

அதிமுக, திமுக யாருமே சரியில்லை

கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் நாகராஜ் பேசியதுதான் ஹைலைட். 1996ம் ஆண்டிலிருந்து தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துள்ள அதிமுக, திமுக கட்சிகளால் தமிழகத்தின் தொழில்துறை பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது என்பதுதான் அவரது குற்றச்சாட்டு. கடந்த 10 ஆண்டுகால மின்வெட்டு பிரச்சினை கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு,குறு தொழில்களை நலிவுற செய்துவிட்டது என்பதே அவர் முன்வைத்த குற்றச்சாட்டு

எங்கே கிடைக்குது?

எங்கே கிடைக்குது?

திமுகவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மின்சாரம் எப்படி எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை குறிப்பிட முடியுமா என்று கேள்வி எழுப்பியதோடு அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால் மின்துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதுதான் சாதனையா?

இதுதான் சாதனையா?

தமிழ்நாடு மின்பொறியாளர் துறையைச்சேர்ந்த காந்தி பேசிய போது, கடந்த 2011ம் ஆண்டு அதிமுக பொறுப்பேற்ற பின்னர் எந்த ஒரு மின்உற்பத்தி திட்டமும் புதிதாக தொடங்கவில்லை செயல்பாட்டுக்கு வரவில்லை என்று கூறினார். தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் மின் உற்பத்தியா.. இது தான் சாதனையா... ஒரு புதிய திட்டம் கூட 4 வருடமாக வராதது ஏன் என்று கேட்டார் காந்தி

இழுத்தடித்தது ஏன்?

இழுத்தடித்தது ஏன்?

2008ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தை இத்தனை ஆண்டுகாலமாக இழுத்தடித்து விட்டது இப்போது 2015ம் ஆண்டு அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது ஏன் என்பது காந்தி முன்வைத்த கேள்வியாகும்.

நாங்க தொடங்கியது

நாங்க தொடங்கியது

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட வடசென்னை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 1,200 மெகாவாட், வல்லூர் 1,000 மெகாவாட், மேட்டூர் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 600 மெகாவாட் என்று இந்த புதிய அனல் மின் நிலையங்களில் இருந்து 2013 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கிறது என்பது திமுகவினரின் விவாதம்.

கவர்னர் சொன்னாரே?

கவர்னர் சொன்னாரே?

கடந்த பிப்ரவரி 17ம் தேதியன்று தமிழக அரசின் சார்பாக கவர்னர் ஆற்றிய உரையில், பக்கம் 25ல், ‘‘மொத்தமாக மாநிலத்தின் மின் உற்பத்தித்திறன் கடந்த 4 ஆண்டுகளில் 3,358 மெகாவாட் அளவு அதிகரித்துள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது எப்படி என்று புள்ளிவிபரமாக கூறப்படவில்லை என்றும் திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

செஞ்சாங்களா? செய்யலையே?

செஞ்சாங்களா? செய்யலையே?

2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வைத்த கொள்கை விளக்க குறிப்பில், தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களான வடசென்னை நிலை-2, மேட்டூர் நிலை-3, தமிழ்நாடு மின்சார வாரியமும் தேசிய அனல் மின்கழகமும் கூட்டு முயற்சியில் தொடங்கிய வல்லூர், தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் கூட்டு முயற்சியில் உருவாக்கிய தூத்துக்குடி ஆகிய 4 திட்டங்களின் மூலம், 2012 ஆம் ஆண்டு இறுதிக்குள் 3,228 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார்கள், அந்த 4 திட்டங்களை நிறைவேற்றுவதில் அ.தி.மு.க. ஆட்சியினர் ஒழுங்காகத் தேவையான அக்கறை காட்டியிருந்தாலே, மின்வெட்டு என்ற நிலைமையே தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்காது என்பது எதிர்கட்சிகளின் கூற்று.

உற்பத்தி செலவு எவ்வளவு?

உற்பத்தி செலவு எவ்வளவு?

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை 1 யூனிட் ஒன்றுக்கு ரூ.3.00 க்கும் குறைவு தான். நெய்வேலி அனல் மின்நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு மின்நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் இதே அளவில் தான் உள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.00க்கும் குறைவு தான்.

வாங்குவது எவ்வளவு?

வாங்குவது எவ்வளவு?

சாமல்பட்டி மின் நிறுவனம், மதுரை மின் நிறுவனம், பிள்ளைபெருமாள்நல்லூர் மின்நிறுவனம், ஜி.எம்.ஆர். மின் நிறுவனம் ஆகிய 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓரு யூனிட் ரூ.15.14 என்ற விலையில் நடப்பாண்டில் 79 கோடி அலகு மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் தன்னிச்சையாக முடிவு செய்தது.

மத்திய மின்நிலையங்கள்

மத்திய மின்நிலையங்கள்

மத்திய மின்நிலையங்களில் இருந்து சராசரியாக ஒரு யூனிட் ரூ.3.00 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. வேறு சில தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.4.26 முதல் ரூ.5.14 வரையிலான விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இழப்பீடு எவ்வளவு

இழப்பீடு எவ்வளவு

4 தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.1205 கோடி கொடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்குகிறது. இதனால் மின்வாரியத்திற்கு கண்ணுக்குத் தெரிந்து ரூ.800 கோடி முதல் ரூ.1000கோடி வரை இழப்பு ஏற்படும். தேவையே இல்லாமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன?

நத்தம் விஸ்வநாதன் சொன்னது நடந்ததா

நத்தம் விஸ்வநாதன் சொன்னது நடந்ததா

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்ட நத்தம் விஸ்வநாதன், 3330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு நீண்டகால ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதன் பலன் படிப்படியாக தமிழகத்திற்குக் கிடைக்க உள்ளது. மேலும், மேற்கண்ட திட்டங்களை தவிர எண்ணூர் விரிவாக்கம், உடன்குடி அனல் மின் திட்டம், எண்ணூர் சிறப்பு பொருளாதார திட்டம் என மொத்தம் 3300 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களுக்கான பணிகளும் மின்வாரியத்தால் விரைவில் தொடங்கப்பட உள்ளன. 4000 மெகாவாட் திறன் கொண்ட செய்யூர் மின் திட்டப் பணிக்கான ஒப்பந்தப் புள்ளியும் இந்த ஆண்டிலேயே இறுதி செய்யப்பட்டு, அதன் பலனாக 1,600 மெகாவாட் அத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும். மேற்கண்ட திட்டங்கள் மூலம் தமிழகத்திற்கு 12730 மெகாவாட் மின்சாரம் இந்த அரசால் கூடுதலாக கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. என்று கூறினார்.

மாறி மாறி சொல்றாங்க

மாறி மாறி சொல்றாங்க

தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்கு திமுக ஆட்சி காலத்தில்தான் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது அதிமுகவினர் குற்றச்சாட்டு. திமுக ஆட்சி காலத்தில்தான் அதிக விலைகொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது என்று குற்றம்சாட்டினார் அதிமுகவின் தீரன். ஆனால் திமுகவைச் சார்ந்த வைத்தியலிங்கமோ அதிமுக ஆட்சி காலத்தில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் தனியாரிடம் கொள்முதல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டியது ஏன் என்று கேட்டார்.

வடசென்னை, நெய்வேலி அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்து, மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதைச் செய்ய வேண்டும்.

சொந்தமாக உற்பத்தி செய்யாமல் ஏன் தனியாரிடம் வாங்கினார்கள் என்பதுதான் காந்தி முன்வைத்த கேள்வி.

மின்வெட்டு இருக்கிறது

மின்வெட்டு இருக்கிறது

தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறோம் என்றார் ஜெயலலிதா ஆனால் கோவை சுற்றுவட்டார பகுதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக பல ஆயிரம் லிட்டர் ஆவின் பால் கெட்டுப்போனது உண்மைதானே என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு தீரனால் பதில் சொல்ல முடியவில்லை.

செயல்பாட்டுக்கு வராதது ஏன்?

செயல்பாட்டுக்கு வராதது ஏன்?

கடந்த 2001-06 அதிமுக ஆட்சியில் ஒரு மின்திட்டம் கூட செயல்பாட்டிற்கு வரவில்லை. திமுக ஆட்சி காலத்தில் 2008ம் ஆண்டிலிருந்து அறிவிக்கப்பட்ட சுமார் 5,000 மெகாவாட் மின்உற்பத்தி திட்டங்கள் 2011ல் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளவேயில்லை. காரணம் அது திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணம்தான். இதோ ஆட்சி முடியப்போகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் வரப்போகிறது இந்த நேரத்தில் 2015 ஆகியும் சுமார் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தித் திட்டங்கள் மட்டுமே மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்று காந்தி கூறியதோடு விவாதம் முடிவுக்கு வந்தது

என்னமோ சொல்றீங்க

என்னமோ சொல்றீங்க

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில் "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்- 2023' குறித்த மாநாடு நடைபெற்றபோது பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வரும்

2023ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை எட்டுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு துறைகளில் சூரிய மின் சக்திக்கான பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

என்ன செய்யப்போறோம்

என்ன செய்யப்போறோம்

மேலும், வருங்கால மின் தேவையக் கருத்தில் கொண்டு, எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்ட இரு அலகுகள் மூலம் தலா 660 மெகாவாட், உடன்குடியில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அலகுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர மேலும் சில மின் உற்பத்தி திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளார் நத்தம் விஸ்வநாதன்.

ஞாபகம் இருக்குமா?

ஞாபகம் இருக்குமா?

திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு அமைச்சரே? ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு ஆட்சி நல்லாட்சி என்று போஸ்டர் ஒட்டிகொள்ளும் அம்மா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது.

மின்வெட்டு இல்லையா?

மின்வெட்டு இல்லையா?

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்ற கருத்து எந்த அளவிற்கு உண்மை என்று புதிய தலைமுறை சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அது உண்மைக்கு மாறானது என்று 79 சதவிகிதம் பேரும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று 21 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.

என்னமோ போடா மாதவா?

என்னமோ போடா மாதவா?

மக்களுக்கு என்ன ஞாபகமா இருக்கப் போகுது. ஓட்டுக்கு பணத்தை வாங்கிட்டு ஒரு குத்து குத்தாம விட்டுவாங்களா என்ன? ஊடகங்களுக்கு விவாதிக்க இதைவிட ஒரு தகவல் கிடைத்தால் அத்தோடு அவர்களும் மறந்து விடுவார்கள். என்பதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் எண்ணமாக உள்ளது.

English summary
Chief Minister Jayalalithaa says that there is no power cut in the state, Is it acceptable or against the truth opposition parties and media’s big debate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X