குக்கர் சின்னம் கோரிய தினகரன் மனு.. ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரன் அணி ஒரு அரசியல் கட்சியே இல்லை...தேர்தல் ஆணையம் அதிரடி- வீடியோ

  சென்னை: குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய டிடிவி தினகரனின் மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார்.

  இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்றும் தனது அணிக்கு அதிமுக அம்மா அணி என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  தேர்தல் ஆணையம் பதில்

  தேர்தல் ஆணையம் பதில்

  இந்த மனு தொடர்பாக நேற்று பதிலளித்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது என தெரிவித்தது.

  மாநில தேர்தல் கமிஷன்

  மாநில தேர்தல் கமிஷன்

  உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்க இந்திய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை என்றும் இது தொடர்பாக மாநில தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

  மனுவை தள்ளுபடி செய்யுங்கள்

  மனுவை தள்ளுபடி செய்யுங்கள்

  தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லை என்றும் அதனால் தினகரனின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

  முதல்வருக்கு உத்தரவு

  முதல்வருக்கு உத்தரவு

  இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குக்கர் சின்னம் கோரிய தினகரன் மனு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Delhi high court orders Chief mininister Edappadi Palanisami and Deputy Chief minister O Paneerselvam on the TTV Dinakaran's cooker symbol case. The case trial is post poned to february 15th.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற