கனமழை எதிரொலி... சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் லேட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று கனமழை பெய்ததால் சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் செல்லும் விமானங்கள் புறப்படவுள்ளன.

சென்னையில் கடந்த 2 தினங்களாக பேய் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் மேலும் இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Delhi, Mumbai, Trivandrum flights will departure too late

இரு தினங்களாக சென்னையைப் புரட்டி போட்ட மழையால் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் மீனம்பாக்கம் பகுதியில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்படவுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy rain lashes Meenambakkam Airport, Chennai from today morning, flights to Delhi, Mumbai, Trivandrum will departure late.
Please Wait while comments are loading...