அஸ்வினி மரணம் வேதனை அளிக்கிறது.. துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மாணவி அஸ்வினியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த ஓ.பி.எஸ்- வீடியோ

  சென்னை: மாணவி அஸ்வினி கொலைக்கு துணைமுதல்வர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

  சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற அதே கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்த மாணவியை அழகேசன் கழுத்தையறுத்து கொலை செய்தார். தற்போது அழகேசன் கைது செய்யப்பட்டுள்ளான்.

  Deputy CM O Paneerselvam condemns Ashwini murder

  ஒருதலை காதலால் ஏற்றுக்கொள்ளாததால் அஸ்வினி கொல்லப்பட்டு இருக்கிறார். தமிழகம் முழுக்க இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

  இந்த நிலையில் மாணவி அஸ்வினி கொலைக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது அவர் டிவிட் செய்துள்ளார்.

  அவர் தனது டிவிட்டில் ''சென்னையில் கேகே நகர் தனியார் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத, இத்தகு வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.'' என்றுள்ளார்.

  இன்னொரு டிவிட்டில் ''குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பகுத்தறியும் பண்பான இளம்தலைமுறையால் தமிழகம் தலை நிமிர வேண்டும்.'' என்றுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  College girl Ashwini murdered in Chennai by man named Azhagesan. This issue creates huge fire in Tamilnadu. Tamilnadu Deputy CM O Paneerselvam condemns Ashwini murder.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற