கோபாலபுரம் விரைந்த ஓ.பி.எஸ், அமைச்சர்கள், தலைவர்கள்.. கருணாநிதி உடல் நலம் விசாரித்தனர்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவுற்றுள்ள நிலையில் துணைமுதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் நலம் விசாரிக்க கோபாலபுரம் வந்தனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவுற்றுள்ள நிலையில் துணைமுதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் நலம் விசாரிக்க கோபாலபுரம் வீட்டுக்கு வருகை தந்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து நலிவடைந்திருப்பதாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் இன்று மாலை அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

மருத்துவமனை அறிக்கை
வீட்டிலேயே அவருக்கு சிகிச்சையளிக்கப்படுவதால் அவரை சந்திக்க யாரும் வரவேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை கோரிக்கை விடுத்திருந்தது.

ஓபிஎஸ்,அமைச்சர்கள் சந்திப்பு
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று சென்னை கோபாலபுரத்திற்கு சென்றுள்ளார். அவருடன் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும் சென்றுள்ளனர்.

குடும்பத்தினரிடம் விசாரிப்பு
கருணாநிதி குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர்.
அரசியல் நாகரிகம் கருதி துணை முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியை சந்தித்ததாக தெரிகிறது.

திருமாவளவன் சந்திப்பு
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் கோபாலபுரம் இல்லம் வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.

நலம் விசாரிப்பு
இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பி.எஸ். ஞானதேசிகன் உள்ளிட்டோரும் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்து அவரது உடல் நிலை குறித்து நலம் விசாரித்தனர்.

சிபிஎம் பாலகிருஷ்ணன்
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனும் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

கோபாலபுரத்தில் பரபரப்பு
பல்வேறு தலைவர்களும் வருகை தருவதால் கோபாலபுரம் இல்லமே பரபரப்பாக காணப்படுகிறது. அப்பகுதியில் பெருமளவில் திமுகவினரும் கூடியுள்ளனர்.

முக்கிய நிர்வாகிகள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவுற்றிருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதையடுத்து மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் கருணாநிதியுடன் உள்ளனர்.
|
ஜெ. அன்பழகன் டிவிட்
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெ. அன்பழகன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
https://twitter.com/JAnbazhagan/status/1022525689847861250
தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார், எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன, இன்று மாலை கோபாலபுரம் சென்று வந்தேன், கடந்த சில நாட்களாக இருந்த உடல்நிலையிலேயே தான் தற்போது இருக்கிறார். விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications