தனுஷ் எங்கள் மகன்தான்... எப்பாடுபட்டாவது நிரூபிப்போம்.. கதிரேசன் மீனாட்சி தம்பதி உறுதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தனுஷ் எங்கள் மகன் என மேலூரைச் சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் தனுஷ் தங்கள் மகன்தான் என்பதை நிரூபிப்போம் என கதிரேசன் மீனாட்சி தம்பதி உறுதியாக தெரிவித்துள்ளது.

தனுஷ் தங்களின் மகன் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலூர் தம்பதி கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் தனுஷ் தங்களின் மகன் தான் என்றும் 2012ஆம் ஆண்டு எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

Dhanush is our son we will prove it: Kathiresan Meenakshi couple

இந்நிலையில் அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்து தனுஷ்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக பேசிய கதிரேசன் - மீனாட்சி தம்பதி பண பலம் ஜெயித்து விட்டதாக கூறினர்.

மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக கூறினார். மரபணு சோதனைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறிய அவர்கள் தனுஷ் தங்களின் மகன்தான் என்பதை நிரூபிப்போம் என தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai high court bench of Madurai dimissed the case against ACtor Dhanush. Kathiresan Meenakshi couple plans to go for appeal in this case.
Please Wait while comments are loading...