பொதுக்குழுவா இது.. தைரியமிருந்தால் எம்.எல்.ஏக்களைக் கூட்டுங்க.. தினகரன் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுக்குழு தீர்மானங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் அல்ல என்றும் அந்த பொதுக்குழு கூட்டம் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சசிகலா, தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றார்.

சென்னையில் கூடியிருப்பது பொதுக்குழு அல்ல வெறும் கூட்டம் மட்டுமே. பொதுச்செயலருக்கு பதில் நான் தான் பொதுக்குழுவை முடியும். பொதுக்குழு தீர்மானங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சி இப்போது நடைபெறவில்லை

 வீட்டுக்கு அனுப்பப் போகிறேன்

வீட்டுக்கு அனுப்பப் போகிறேன்

தமிழகத்தில் நடைபெறுவது பழனிச்சாமி அண்ட் கோவின் ஆட்சி நடக்கிறது. எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலைகளில் இறங்கிவிட்டேன். ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உட்காருவதை தொண்டர்கள் விரும்பவில்லை.

 டெபாசிட் கூட வாங்க முடியாது

டெபாசிட் கூட வாங்க முடியாது

தேர்தலை சந்திக்க பயம். தேர்தல் வந்தால் இவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்.

 துரோகமும் துரோகமும் இணைந்து

துரோகமும் துரோகமும் இணைந்து

துரோகமும், துரோகமும் இணைந்து கூட்டணி வைத்து ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை தொண்டர்கள் விரும்பவில்லை. பதவி சுகம் அனுபவித்து விட்டு கட்சியை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர்.

 தைரியம் இருந்தால்

தைரியம் இருந்தால்

117 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். தைரியமிருந்தால் மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி நிரூபியுங்கள் என்று சவால் விட்டார் டிடிவி தினகரன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran has rejected the decision of ADMK GC meeting held in Chennai today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற