டிடிவி தினகரனுடன் இயக்குநர் பாரதிராஜா திடீர் சந்திப்பு !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இன்று சந்தித்து பேசி வருகிறார்.

அதிமுக அம்மா அணியும் இரண்டாக உடைந்துள்ளது. ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

Director Bharathiraja meet TTV Dinakaran

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் டிடிவி தினகரனை ஓரம்கட்டிவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் டிடிவி தினகரன், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் உத்தரவின்படி அணிகள் இணைப்புக்காக நான் 60 நாட்கள் விலகி இருக்கிறேன். ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு பிறகு எனது கட்சி பணிகளை தீவிரப்படுத்துவேன் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இன்று மாலை சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பு நட்பு ரீதியிலானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Director Bharathiraja today meets TTV Dinakaran at his home chennai
Please Wait while comments are loading...