For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா புஷ்பா நடந்து கொண்ட விதம் சரியில்லை... ஜெ. நண்பர் வெங்கையா நாயுடு கோபம்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா நடந்து கொண்ட விதம் சரியில்லை. ஆனால், அவர் தனக்கு பாதுகாப்பு கோரி அவைத் தலைவரிடம் கடிதம் அளித்தால் அது உரிய முறையில் பரிசீலிக்கப்படும். பாதுகாப்பு அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. திருச்சி சிவாவை விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கினார் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. இது தொடர்பாக நேற்று அவர் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து விளக்கமளித்ததாகக் கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, அதிமுக தலைமை மீது அதிரடியாக பலக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், தனக்கு பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்த சசிகலா புஷ்பா, தன்னை ராஜினாமா செய்யச் சொல்லி கட்சித் தலைமை நிர்பந்தித்ததாகவும் குற்றம் சாட்டினார்.

எதிர்ப்பும், ஆதரவும்...

எதிர்ப்பும், ஆதரவும்...

ஜெயலலிதா குறித்து சசிகலா ராஜ்யசபாவில் பேசியதற்கு மற்ற அதிமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சசிகலாவைத் தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரவு அளித்தனர்.

காங்கிரஸ்...

காங்கிரஸ்...

அப்போது இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத், "சசிகலா புஷ்பாவை பேச அனுமதிக்க வேண்டும். அவர் சில பிரச்சனைகள் பற்றி இங்கு பேசுகிறார். மற்ற உறுப்பினர்களுக்கும் இது ஏற்படலாம். எனவே அவரை கண்டிப்பாக பேச அனுமதிக்க வேண்டும். ஒரு உறுப்பினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்றார். இதேபோல் வேறு சில கட்சி உறுப்பினர்களும் பேச அனுமதிக்க வேண்டும்" என்றார்.

வெங்கையா நாயுடு...

வெங்கையா நாயுடு...

இதேபோல், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில், "உறுப்பினர் சசிகலா நடந்து கொண்ட விதம் சரி அல்ல. அந்த பிரச்சனைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதே சமயம் அவர் தனக்கு பாதுகாப்பு கோரி அவைத் தலைவரிடம் கடிதம் அளித்தால் அது உரிய முறையில் பரிசீலிக்கப்படும். பாதுகாப்பு அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

பாராட்டு...

பாராட்டு...

சமீபத்தில் வெங்கையா நாயுடு தமிழகம் வந்தபோது முதல்வர் ஜெயலலிதா அவரை வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்தார். அதேபோல கலாம் நினைவு தின நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை, புரட்சித் தலைவி என்று வாய்க்கு வாய் கூறிப்பேசினார் வெங்கையா என்பதும் நினைவிருக்கலாம்.

English summary
I&B Minister M Venkaiah Naidu said discussing Sasika Pushpa issue will not add to the glory of the House. Observing that he would not join the issue, Naidu said any member having any problem can write to the Chairman who will take appropriate action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X