For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெறும் 12 பெண்களுக்கே டிக்கெட் கொடுத்த கட்சிகள்.. பாஜகவில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை!

|

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் சார்பில் வெறும் 12 பெண் வேட்பாளர்களை நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் பாஜகவில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு சட்டசபைகள், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வழங்குவோம் என்று அரசியல் கட்சிகள் வாய் கிழியக் கத்தி வருகின்றன.

அதிலும் உமன் எம்பவர்மென்ட் பற்றிப் பேசி வரும் இந்த ராகுல் காந்தியோ 50 சதவீத இடஒதுக்கீடு தருவோம் என்றும் கூறி வருகிறார்.

ஆனால் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு இந்தக் கட்சிகள் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால், அட அப்ரண்டிஸ்களா என்றுதான் இந்த அரசியல் கட்சிகளைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது.

39 தொகுதிகள்.. 12 பெண் வேட்பாளர்கள்

39 தொகுதிகள்.. 12 பெண் வேட்பாளர்கள்

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் சார்பில் மொத்தமே 12 பெண்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுகதான் டாப்

அதிமுகதான் டாப்

இதில் அதிக அளவிலான பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள கட்சி அதிமுகதான். அதாவது 4 பெண்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது.

கம்யூனிஸ்டுகள் 3 பேருக்கு

கம்யூனிஸ்டுகள் 3 பேருக்கு

கம்யூனிஸ்ட் கட்சிகள் மொத்தமாக 3 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதில் சிபிஎம் 2 பெண்களுக்கு சீட் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் 3- திமுக 2

காங்கிரஸ் 3- திமுக 2

திமுக 2 பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. காங்கிரஸ் 3 பெண்களை வேட்பாளர்ளாக்கியுள்ளது.

அதிமுகவின் நான்கு பெண்கள்

அதிமுகவின் நான்கு பெண்கள்

அதிமுக சார்பில் காஞ்சிபுரம் (மரகதம் குமாரவேல்), திருவண்ணாமலை (வனரோஜா), திருப்பூர் (சத்தியபாமா), தென்காசி (வசந்தி முருகேசன்) ஆகிய 4 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

திமுகவின் இருவர்

திமுகவின் இருவர்

தி.மு.க. 35 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் சேலம் (உமாராணி), ஈரோடு (பவித்திரவள்ளி) ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

காங்கிரஸின் மூவர்

காங்கிரஸின் மூவர்

காங்கிரசில் சாருபாலா தொண்டைமான் (திருச்சி), ஜோதிமணி (கரூர்), ராணி (விழுப்புரம்) ஆகிய 3 பெண்களே போட்டியிடுகிறார்கள்.

இடதுசாரிகள்

இடதுசாரிகள்

இடது சாரிகளான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு தலா 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வாசுகி (வடசென்னை), தமிழ்ச்செல்வி (தஞ்சாவூர்) ஆகியோரையும், இந்திய கம்யூனிஸ்டு உமா மகேஸ்வரியையும் (ராமநாதபுரம்) பெண் வேட்பாளராக அறிவித்துள்ளன.

தேமுதிக - பாஜக மோசம்

தேமுதிக - பாஜக மோசம்

தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் ஒரு பெண் வேட்பாளர் கூட இக்கட்சியில் இல்லை. பாஜகவும் பெண் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. மதிமுக கூட ஒரு பெண்ணையும் வேட்பாளராக நிறுத்தாதது ஆச்சரியம் அளித்துள்ளது.

பெண்களை மதிக்காத பாமக

பெண்களை மதிக்காத பாமக

அதேபோல பாமகவும் பெண்களுக்கு ஒரு சீட் கூட தரவில்லை. எல்லாமே ஆண்கள்தான்.

English summary
DMDK, BJP, PMK, MDMK have failed to field even a single woman candidate in the Ls eletion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X