விஜயகாந்த் தலைமையில் இஃப்தார் நோன்பு திறப்பு...ஜூன் 20ல் தேமுதிக அலுவலகத்தில் ஏற்பாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜூன் 20ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இஃப்தார் நோன்பு திறப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலானை முன்னிட்டு நோன்பிருக்கும் சடங்கு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் அரசியல் தலைவர்களும் தங்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

DMDK to have Iftar evening meals with muslims on June 20

ஜூன் 21-ல் அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 20ம் தேதி தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சி கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK chief Vijayakanth to have the evening meal Iftar with muslims on June 20th, the party announced earlier today
Please Wait while comments are loading...