For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து செப்.16-ல் தேமுதிக உண்ணாவிரதம்: விஜயகாந்த் #cauvery

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடக அரசு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 20 நாட்களுக்கு 12,000 கன அடி தண்ணீர் தினந்தோறும் தந்தே தீர வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை ஏற்று கொள்ள முடியாத சில கன்னட அமைப்பினர் தொடர்ந்து தமிழக மக்களின் ஓட்டல்களையும், சிறு கடைகளையும், 40 லாரிகளையும், பஸ் டெப்போவில் நிறுத்தி வைக்கப்படிருந்த 45 பஸ்களையும் எரித்து தமிழர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளனர்.

அது மட்டும் அல்லாமல் அப்பாவி தமிழ் இளைஞரை கன்னட திரை உலகத்தை சேர்ந்த சிலர் மன்னிப்பு கேட்க சொல்லியும், அடித்தும் துன்புறுத்திய வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி தமிழக மக்களை மிகவும் வேதனை பட வைத்துள்ளது. இந்த நிகழ்வுகளை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.

நதிநீர் இணைப்புதான்...

நதிநீர் இணைப்புதான்...

114 வருடங்களாக தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் இடையே நடக்கும் காவிரி நீர் பிரச்சனைக்கு இதுவரை தீர்வே ஏற்படாமல் நீண்ட நெடிய தொடர் நிகழ்வாகவே வருடந்தோரும் அரங்கேறி வருகிறது. உண்மையில் இந்த தண்ணீர் பிரச்சனைக்கு மாநிலங்களுக்கிடையே நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால் தேசிய நதிகளை இணைப்பதால் மட்டுமே சாத்தியமாகும் என்று தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

விட்டுக் கொடுக்கனும்

விட்டுக் கொடுக்கனும்

நம்மை பொறுத்த மட்டில் அண்டை மாநிலத்தை சேர்ந்த அனைவரும் சகோதர, சகோதரிகளே. நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆமைவேக ஜெயலலிதா

ஆமைவேக ஜெயலலிதா

மொத்த அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் வாய் மூடி மௌனியாகவே இருந்து பஸ்களும், லாரிகளும் எரிந்த பிறகு கர்நாடக முதல்வர் கடிதம் எழுதிய பிறகு ஜெயலலிதா கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு கடிதம் எழுதி ஆமை வேகத்தில் செயல்பட்டது உண்மையிலே கண்டனத்திற்குரியது.

16-ல் உண்ணாவிரதம்

16-ல் உண்ணாவிரதம்


இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டும் பொருட்களையும், உடமைகளையும் அழித்தும் வன்முறையை அதிக அளவு நிகழ்த்தும் வரை ஜெயலலிதா அமைதி காத்தது வேதனைக்குரியது. எனவே கர்நாடக மக்களின் இந்த தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கும் விதமாக தேமுதிக சார்பில் வரும் வெள்ளிக்கிழமை 16.09.2016 அன்று மாபெரும் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம் தேமுதிக (கோயம்பேடு) தலைமை கழக அலுவலகம் முன்பு நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

English summary
DMDK leader Vijayakanth said that his party will hold hunger strike on Sep. 16 on Cauvery Water Dispute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X