ரஜினி அரசியலுக்கு வந்தால் தேமுதிக நிலை என்னவாகும்? விஜயகாந்த் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் ரஜினிகாந்த்தால் தேமுதிகவிற்கு பாதிப்பு இல்லை என்றும் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியும், அப்படி ஒரு வேளை அரசியலுக்கு வந்தால் அவர் தனிக்கட்சித் தொடங்குவாரா தேசிய கட்சிகளுடன் கைகோர்ப்பாரா என்று பல்வேறு வியூகங்கள் பரவி வருகின்றன. ரஜினியின் அரசியல் வருகைக்கு பல தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், தமிழ் ஆர்வலர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

DMDK President Vijayakanth said that Rajini's political entry didn't affect his party

இந்நிலையில் கீழடியில் அகழ்வாராய்ச்சி இடத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், எதிர்ப்பு இருந்தால் தான் அரசியல், ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றும் பதிலளித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK President Vijayakanth says that Rajini's political entry didn't affect his party's functionaries and in democratic country everyone has the rights to enter into politics.
Please Wait while comments are loading...