For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தி.மு.க கூட்டணிதான் முக்கியம்; சீட் அல்ல!' - ராகுலுக்கு அலெர்ட் கொடுத்த சோனியா

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேசியக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

'ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான கட்சிகளோடு கூட்டணியை உறுதிப்படுத்துங்கள். தி.மு.க கூட்டணியில் நமக்கு சீட் முக்கியமல்ல. கூட்டணிதான் முக்கியம்' என ராகுல்காந்தியை அலெர்ட் செய்திருக்கிறார் சோனியா காந்தி.

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மூன்றாம் அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அதன் ஒருகட்டமாக, கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதியை சந்தித்தார்.

மூன்றாவது அணியால் மோடிக்கு லாபம்

மூன்றாவது அணியால் மோடிக்கு லாபம்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். காங்கிரஸைத் தவிர்த்து, இப்படியொரு அணி கட்டமைக்கப்படுவதை ராகுலும் சோனியாவும் ரசிக்கவில்லை. "மூன்றாவது அணிக்கான முயற்சி வெற்றி பெற்றால், நிச்சயம் அது மோடிக்குத்தான் கை கொடுக்கும். பா.ஜ.கவை எதிர்ப்பதற்காக நாமெல்லாம் ஓரணியில் திரள வேண்டும்' என காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வந்தனர். இதற்குத் தொடக்கப் புள்ளி போடும்விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்துப் பேசினார் ராகுல் காந்தி.

ராகுலிடம் சோனியா ஆலோசனை

ராகுலிடம் சோனியா ஆலோசனை

இந்த சந்திப்பு, தி.மு.க வட்டாரத்தை உற்றுக் கவனிக்க வைத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும், ' தி.மு.கவைத் தவிர்த்துவிட்டு இந்த சந்திப்பு நடக்கவில்லை. நாங்கள் நடத்தப்போகும் 'தேசம் காப்போம்' மாநாட்டுக்கு ராகுலை அழைத்தோம். இதே மாநாட்டில் பங்கேற்க தி.மு.கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' என்றனர். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கப்படுவது குறித்து ராகுலிடம் தீவிரமாக விவாதித்திருக்கிறார் சோனியா.

இப்போதைய நிலை

இப்போதைய நிலை

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், "லோக்சபா தேர்தலில் தி.மு.கவுடன்தான் கூட்டணி என்பதில் சோனியா உறுதியாக இருக்கிறார். ' இந்தமுறை பா.ஜ.கவை எப்படியாவது வீழ்த்த வேண்டும்' என வைராக்கியமாக இருக்கிறார். இதைப் பற்றி ராகுலிடம் பேசும்போது, ' பல மாநிலங்களில் நமது உண்மையான நிலை என்ன என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். உ.பி.யில் பரிதாபமான ஓட்டுக்களை வாங்கினோம். தனியாகக் களமிறங்கினால் வரக் கூடிய வெற்றியும் வந்து சேராது. ஒவ்வொரு மாநிலத்திலும் நமக்கு எவ்வளவு சீட் கிடைக்கிறதோ, அதைப் பெற்றுக் கொண்டு வேலையில் தீவிரமாக இறங்க வேண்டும். 2009ம் ஆண்டு தமிழ்நாட்டில் நமக்கு 16 சீட்டுகளைக் கொடுத்தார் கருணாநிதி. அதில் எட்டு சீட்டுகளை ஜெயித்தோம். இப்போது நிலைமை அப்படியில்லை. ஜி.கே.வாசனும் நம்மிடம் இல்லை.

கூட்டணியில் இடம் பிடித்தால் போதும்

கூட்டணியில் இடம் பிடித்தால் போதும்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாம் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாலே போதுமானது. அந்தக் கூட்டணியில் ஒரு கட்சியாக இடம் பிடித்தால் போதும். நமக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்க வேண்டுமோ, அதை தி.மு.க ஒதுக்கும். யார் என்ன சொன்னாலும், அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

பலப்படுத்த வேண்டும்

பலப்படுத்த வேண்டும்

தி.மு.கவைவிட்டு விலகியதால், எத்தனை தொகுதிகளில் நாம் டெபாசிட்டைப் பறிகொடுத்தோம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தக் கூட்டணியை பலப்படுத்துவதற்கு இதர கட்சிகள் வந்தால் அவர்களையும் பயன்படுத்திக் கொள்வோம். இதேபோல், ஒவ்வொரு மாநிலங்களிலும் கூட்டணியை உறுதிப்படுத்தும் வேலையைத் தொடங்குங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். அவரது ஆலோசனையை ராகுலும் ஏற்றுக் கொண்டார்" என்றார் விரிவாக.

English summary
Sonia Gandhi advaiced her son and Congress chief Rahul Gandhi that, DMK alliance is enough for the party not seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X