For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநரை உள்ளே விட மாட்டோம்.. மயிலாடுதுறையில் திரண்ட கட்சிகள்.. கருப்புகொடியோடு பெரும் ஆர்ப்பாட்டம்!

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டு வருகிறது. ஆளுநர் ரவி வருகையை எதிர்த்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ரவிக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ரவி நீட் விலக்கு 9 மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக ஆளும் தரப்பு ஆளுநரை கடுமையாக எதிர்த்து உள்ளது.

அதோடு ஆளுநர் ரவி கொடுத்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. இது ஆளுநர் - ஆளும் கூட்டணிக்கு இடையில் மேலும் மோதலை அதிகப்படுத்தியது.

பந்தை எங்ககிட்ட அனுப்புங்க! டெல்லி கிரீன் சிக்னல்.. ஆளுநர் ரவியின் திடீர் மனமாற்றம்.. பரபர காரணம்!பந்தை எங்ககிட்ட அனுப்புங்க! டெல்லி கிரீன் சிக்னல்.. ஆளுநர் ரவியின் திடீர் மனமாற்றம்.. பரபர காரணம்!

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

இந்த நிலையில்தான் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கூட்டணி மூலம் கருப்பு கொடி காட்டப்படும் என்றும் செய்திகள் வந்தன. தமிழ்நாடு முழுக்க ஆளுநரை எதிர்க்க கூட்டணி கட்சிகள் முயன்று வருவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு இன்று ஆளுநர் ரவி செல்வதாக திட்டமிடப்பட்டது. தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து விழா எடுக்கப்படும்.

என்ன விழா

என்ன விழா

இங்கிருந்து ஞானரதம் இன்று தெலுங்கானாவிற்கு செல்ல உள்ளது. இந்த பயணத்தை ஆளுநர் ரவி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்க கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதற்காக நேரடியாக மடத்திற்கு சென்று தருமபுரம் ஆதினத்திடம் புகார் வைத்தனர். ஆளுநர் தமிழ்நாட்டின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறார்.

ஆளுநர் ரவி எதிர்ப்பு

ஆளுநர் ரவி எதிர்ப்பு

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மசோதாக்களை அவர் ஏற்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை அவர் மதிக்கவில்லை. 420 ஆண்டுகால தமிழ்மரபு உள்ள மடமாக தருமபுரம் ஆதீனம் உள்ளது. நீங்கள் போய் ஆளுநரை விழாவிற்கு அழைப்பது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சி நிர்வாகிகள், இந்த விழாவிற்கு ஆளுநரை அழைக்க கூடாது என்று கூறி உள்ளோம்.

 கருப்பு கொடி

கருப்பு கொடி

அதை மீறி ஆளுநரை அழைத்தால் கண்டிப்பாக போராட்டம் செய்வோம். ஆளுநரை அனுமதிக்காமல் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். ஆளுநரை அழைப்பதன் மூலம் இதுவரையில் எந்த ஆதீனமும் செய்யாத தவறை அதன் தலைமை செய்துள்ளது. அதை நாங்கள் ஏற்க முடியாது என்று அறிவித்தனர்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த நிலையில் அங்கு பாஜகவினர் கூடி ஆளுநரை வரவேற்க உள்ளனர். அதிக அளவில் பாஜகவினர் ஒன்றாக கூடி ஆளுநரை வரவேற்கும் திட்டத்தில் இருக்கின்றனர். இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. ஆளுநரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர ஆளுநர் ரவி முடிவு? என்ன நடந்தது ?
    போலீஸ் குவிப்பு

    போலீஸ் குவிப்பு

    இந்த நிலையில் அங்கு பாஜகவினர் கூடி ஆளுநரை வரவேற்க்க உள்ளனர். அதிக அளவில் பாஜகவினர் ஒன்றாக கூடி ஆளுநரை வரவேற்கும் திட்டத்தில் இருக்கின்றனர். இதனால் அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. ஆளுநரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK allies protest against Governor Ravi with a black flag in Mayiladudurai. மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டு வருகிறது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X