For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவ வேலு பாட.. துரைமுருகன் தாளம் போட.. களைக்கட்டிய சட்டசபை!

கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எ.வ.வேலு நாட்டுப்புற பாடல் பாட துரைமுருகன் தாளம் இசைத்தார்

Google Oneindia Tamil News

சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எ.வ.வேலு நாட்டுப்புற பாடல் பாட துரைமுருகன் தாளம் இசைத்தார்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கியது. சட்டசபை கூட்டத்தொடரில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

என்னதான் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும் அவ்வப்போது சிறுசிறு நகைச்சுவை சம்பவங்களும் அரங்கேறி அவை சுவாரசியமாக செல்ல உதவியாக உள்ளது.

சட்டசபையில் நகைச்சுவை

சட்டசபையில் நகைச்சுவை

எதிர்க்கட்சித் துணை தலைவரான துரைமுருகன் அவ்வப்போது காமெடியாக சில கருத்துக்களை கூறி அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

பாட்டுப்பாடிய வேலு

பாட்டுப்பாடிய வேலு

இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் போது திமுக முன்னாள் அமைச்சர் எவ வேலு நாட்டுப்புற கலைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் நாட்டுப்புற பாடல் ஒன்றையும் பாடினார்.

தாளம்போட்ட துரைமுருகன்

தாளம்போட்ட துரைமுருகன்

எவ வேலு பாட்டுப்பாட எதிர்க்கட்சித் துணை தலைவரான துரைமுருகன் மேசையை தட்டியப்படி தாளம் இசைத்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார் நவரச நாடகம் தெரிந்த துரைமுருகன் ஏன் நாட்டுப்புற கலை பற்றி தீர்மானம் கொண்டுவரவில்லை என கேள்வி எழுப்பினார்.

வெட்கப்பட்ட துரைமுருகன்

வெட்கப்பட்ட துரைமுருகன்

மேலும் இசை தாளம் போடும் துரைமுருகன் பாட்டுப்பாடினால் நன்றாக இருக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதனைக்கேட்டு வெட்கத்தில் சிரித்தார் துரைமுருகன். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

ஜெ.வுடன் நடித்திருப்பேன்

ஜெ.வுடன் நடித்திருப்பேன்

ஏற்கனவே நான் நன்றாக நடிப்பேன், நடிகனாகியிருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன் என்று கூறி சட்டசபையை கலகலத்தார் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK brings resolution on folk arts. Former Minister EV Velu sung a folk song. Duraimurugan played music for that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X