For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தொண்டர்களே நம்பிக்கையோடு இருங்க.. இந்த மாதிரி போஸ்டரெல்லாம் வேண்டாம்!

கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக தொண்டர்களே நம்பிக்கையோடு இருங்க | DMK Cadres created condolence posters for Karunanidhi

    சென்னை: தீவிர சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு திமுக தொண்டர்களே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது பெரும் சர்ச்சைக்குரியதாகி உள்ளது. அத்துடன் அந்த போஸ்டர்கள் அனைத்தும் இணையதளத்தில் வைரலாகியும் வருகிறது.

    திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலன் குறித்து அறிந்து கொளள் தினந்தோறும் நாட்டின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனை வந்து செல்கின்றனர்.

    மக்கள் பிரார்த்தனை

    மக்கள் பிரார்த்தனை

    அதேபோல தமிழகத்தின் திமுக தொண்டர்களும் மருத்துவமனை வாயிலில் கூடி வருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என திமுக தொண்டர்கள் இல்லாமல் பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சீராகி வருகிறது

    சீராகி வருகிறது

    நேற்று முன்தினம் கருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தமிழகமே பரபரப்பானது. ஆனால் கருணாநிதியின் உடல்நலன் தற்போது சீராகி வருவதாக காவேரி மருத்துவமனையும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் அவ்வப்போது மக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

    தொண்டர்களின் போஸ்டர்

    தொண்டர்களின் போஸ்டர்

    இந்நிலையில், கருணாநிதி சிகிச்சையில் இருக்கும்போதே, அவர் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை அடித்து ஒட்டியதே திமுக தொண்டர்கள்தான் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.

    வைரலாகும் படங்கள்

    வைரலாகும் படங்கள்

    கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே அவருக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    DMK Cadres created condolence posters for Karunanidhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X