ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை தேர்தலில் திமுக ஜெயிக்காது: மு.க. அழகிரி பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திமுக செயல்தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை தேர்தலில் ஜெயிக்காது- வீடியோ

  சென்னை: செயல்தலைவராக ஸ்டாரின் இருக்கும் வரை ஒருபோதும் எந்த தேர்தலிலும் திமுக ஜெயிக்காது என்று மு.க. அழகிரி கூறியுள்ளார். வெற்றிப்பாதையில் செல்ல வேண்டும் என்றால் திமுகவில் மாற்றம் தேவை என்றும் கூறியுள்ளார்.

  திமுகவில் மாறுதல் தேவை என்றும் அவர் சரியான ஹெட்மாஸ்டர் இல்லை என்றும் கூறியுள்ளார். துரோகிகளுக்கும், புதியவர்களுக்கும் மட்டும்தான் பதவி தரப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

  தம்பி வா தலைமையேற்க வா என்று கேட்டால் நடக்காது. களத்தில இறங்கி வேலை செய்யதான்தான் ஜெயிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

  தினகரனுக்கு ஓட்டு

  தினகரனுக்கு ஓட்டு

  அதிமுக, திமுக மீது வெறுப்பு இருந்ததால்தான் டிடிவி தினகரனை தேர்வு செய்துள்ளனர். களப்பணியாற்றினால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும். திருமங்கலம் இடைத்தேர்தலில் நாங்கள் எப்படி வேலை செய்தோம் என்பதை நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

  பணம் மட்டுமே நிர்ணயிக்காது

  பணம் மட்டுமே நிர்ணயிக்காது

  தேர்தல் ஆணையம் கூறியுள்ள அளவிற்குத்தான் பணம் செலவு செய்ய முடியும். பணம் மட்டுமே வெற்றிக்கு காரணமாகி விடாது. உழைப்பும் தேவை அது இருந்தால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும். ஸ்டாலின் ஜீப்பில் சென்று ஓட்டு கேட்கிறார். தெருவில் இறங்கி நடக்க வேண்டும். இப்போது ஸ்டாலின் உடன் இருப்பவர்கள் சரியில்லை இதுவே தோல்விக்கு காரணம்.

  புதியவர்களுக்கு பதவி

  புதியவர்களுக்கு பதவி

  திமுகவில் துரோகிகளுக்கும், புதியவர்களுக்கும் மட்டுமே பதவி தரப்படுகிறது. தொண்டர்களுக்கு பதவி தரப்படுவதில்லை. திமுகவினரை பணத்திற்காக விலை போனதாக கூறுவது எப்படி? திமுகவில் மாற்றம் வந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

  சாட்டையை சுழற்ற வேண்டும்

  சாட்டையை சுழற்ற வேண்டும்

  கட்சியில் சாட்டை சுழற்றும் சரியான ஹெட்மாஸ்டராக இருக்கவேண்டும். கட்சி தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஜெயிக்க முடியும். ஸ்டாலின் செயல்படாத தலைவராக இருக்கிறார். அவர் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக எந்த தேர்தலிலும் ஜெயிக்காது என்றும் அழகிரி கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Former union minister MK Azhagiri has come down heavily on DMK Working president MK Stalin for the loss of RK Nagar by poll and asked Stalin to leave the party posts.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற